Flipkart Big Savings Days: லேப்டாப்களில் 80 % தள்ளுபடி; இந்த பொருட்களை ரூ.49-க்கு வாங்கலாம்

Flipkart Big Savings Days: பிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டே விற்பனையில் லேப்டாக்ள் 80 விழுக்காடு தள்ளுபடியிலும், சில பொருட்களை வெறும் 49 ரூபாய்க்கும் நீங்கள் வாங்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 13, 2023, 09:50 AM IST
Flipkart Big Savings Days: லேப்டாப்களில் 80 % தள்ளுபடி; இந்த பொருட்களை ரூ.49-க்கு வாங்கலாம் title=

பண்டிகை கால கொண்டாட்டத்தையொட்டி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டே விற்பனையை அறிவித்துள்ளது. ஜனவரி 15ஆம் தேதி தொடங்கும் இந்த ஆஃபர் கொண்டாட்டம் ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும். இதில் எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் போன்றவற்றுக்கு பெரும் தள்ளுபடி வழங்க்கப்படும் என பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர, சமையல் சாதனப் பொருட்களை வெறும் ரூ.49 விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

பிளிப்கார்ட் ஆஃபர்

Flipkart Plus உறுப்பினர்களுக்கு விழாக்கால சலுகையாக ஒருநாள் முன்கூட்டியே அதாவது பிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டே விற்பனை தொடங்கும் ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன்னதாக ஜனவரி 14 ஆம் தேதியே ஆஃபரில் பொருட்களை வாங்கிக் குவிக்கலாம். இந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை 24 மணிநேரத்திற்கு முன்பே அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

மேலும் படிக்க | Flipkart Republic Day Sale 2023: கோடாக் ஸ்மார்ட் டிவி-யில் சூப்பர் தள்ளுபடி, லிஸ்ட் இதோ

இருப்பினும், பிளிப்கார்ட் பிளஸ் அல்லாத உறுப்பினர்கள் தங்கள் Flipkart கணக்கிலிருந்து 40 SuperCoins ஐப் பயன்படுத்தி பிளஸ் உறுப்பினர்களைப் பெறலாம். அதன்பிறகு பிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டே விற்பனையிலும் முன்கூட்டியே பங்கு பெறலாம். Flipkart Axis Credit Card மூலம் மொபைல் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். இது தவிர, சிட்டி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி அட்டை வைத்திருப்பவர்கள் விற்பனையில் 10 சதவீத உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.

மடிக்கணினிகளில் 80% வரை தள்ளுபடி

பிக் பில்லியன் டேஸ் 2023 விற்பனையில் கிடைக்கும் சில சலுகைகள் பற்றிய தகவலை Flipkart பகிர்ந்துள்ளது. விற்பனையில், வாடிக்கையாளர்கள் மடிக்கணினிகள் வாங்குவதற்கு 80% வரை தள்ளுபடி பெறலாம். இது தவிர, இ-காமர்ஸ் தளம் ஸ்மார்ட் டிவிகள், சமையலறை உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி வழங்கும்.

49 ரூபாய்க்கு பொருட்கள்

இதுமட்டுமின்றி, ஃபிளிப்கார்ட் விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் வீட்டு மற்றும் சமையலறை சாதனங்களின் சில பொருட்களை வெறும் 49 ரூபாய்க்கு வாங்கலாம். அதே சமயம் அழகு, உணவு மற்றும் விளையாட்டு வகைகளில் சில சலுகைகள் வெறும் ரூ.99 முதல் தொடங்கும். இதுமட்டுமின்றி, தினமும் காலை 12 மணி, காலை 8 மணி, மாலை 4 மணி என விற்பனையின் போது சில சிறப்புச் சலுகைகளை நிறுவனம் கொண்டு வரும். இந்த நேரத்தில் நீங்கள் பல தயாரிப்புகளில் சிறந்த சலுகைகளை பெறலாம்.

மலிவான போன் கிடைக்கும்

இது மட்டுமின்றி, பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கும் பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும். விலையுயர்ந்த ஃபிளாக்ஷிப் போன்களைத் தவிர, இ-காமர்ஸ் தளம் மிட்ரேஞ்ச் சாதனங்களுக்கும் தள்ளுபடியை வழங்கும். நத்திங் ஃபோன் 1, சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற பிராண்டுகளின் சாதனங்களில் சிறந்த சலுகைகளை எதிர்பார்க்கலாம். 

மேலும் படிக்க | Big Saving Days Sale; பிளிப்கார்ட்டில் இந்த போன்களுக்கெல்லாம் மிகப்பெரிய தள்ளுபடி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News