Flipkart Big Billion Days: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ஆஃபரில் எலக்டிரானிக்ஸ் பொருட்களை அள்ளலாம்

Diwali Sale 2022: பிளிப்கார்டில் விரைவில் தொடங்க இருக்கும் Flipkart Big Billion Days ஆஃபரில் எலக்டிரானிக்ஸ் பொருட்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள் கொடுக்கப்பட இருக்கின்றன.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 16, 2022, 05:56 AM IST
  • விரைவில் தொடங்க இருக்கும் தீபாவளி விற்பனை
  • அமேசான் - பிளிப்கார்ட்டில் கூடுதல் தள்ளுபடிகள்
  • எலக்டிரானிக்ஸ் பொருட்களை நீங்கள் அள்ளிச் செல்லலாம்
Flipkart Big Billion Days: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ஆஃபரில் எலக்டிரானிக்ஸ் பொருட்களை அள்ளலாம் title=

Diwali Sale 2022: ஆன்லைன் விற்பனையில் கோலோச்சும் இந்திய இ-காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட், தீபாவளி சீசன் விற்பனையைத் தொடங்கத் தயாராக உள்ளன. இந்த இரண்டு விற்பனையும் இந்த ஆண்டு செப்டம்பர் 23 முதல் தொடங்கும். ஏழு நாள் நடைபெற இருக்கும் Flipkart-ன் Big Billion Days விற்பனை செப்டம்பர் 23 அன்று தொடங்கி செப்டம்பர் 30 அன்று முடிவடையும். Pixel 6a மற்றும் Nothing Phone 1 போன்ற சாதனங்களில் Flipkart பல சலுகைகளை வழங்க இருக்கிறது. 

அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா

Samsung மற்றும் iQoo-ஆல் ஸ்பான்சர் செய்யப்பட இருக்கும் Amazon Great Indian Festival விற்பனையில், இந்த இரண்டு பிராண்டுகளிலிருந்தும் சில நல்ல சலுகைகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம். Redmi 11 Prime 5G, iQoo Z6 Lite 5G மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட iPhone 14 தொடர் போன்ற போன்களும் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கான கூடுதல் தள்ளுபடிகள் இருக்க வாய்ப்புள்ளது என்பதை Amazon சூசகமாக தெரிவித்துள்ளது. 

ஸ்மார்ட்வாட்ச்கள், மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் பிற டேப்லெட்டுகள் போன்ற மின்னணு தயாரிப்புகளுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். விற்பனை துவங்கிய பிறகு ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருமுறை புதிய சலுகைகளை வழங்குவதாக அமேசான் தெரிவித்துள்ளது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ. 15,000 வரை தள்ளுபடி வழங்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அதன் விலை ரூ.54,999 ஆக குறையும். அமேசான் வாடிக்கையாளர்கள் Boat Airdopes 441 மற்றும் பிற TWS இயர்பட்களிலும் அற்புதமான சலுகைகளை எதிர்பார்க்கலாம். செப்டம்பர் 23 முதல் இந்த விற்பனை தொடங்க இருக்கிறது. 

மேலும் படிக்க  | ஆதார் தரவுகளை பாதுகாக்க பயோமெட்ரிக்சை 'லாக்' செய்தால் போதும்: முழு செயல்முறை இதோ

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022:

பிக் பில்லியன் டேஸ் 2022 தொடங்க இருக்கும் நிலையில், பேமெண்ட் பார்ட்னராக Paytm இணைந்துள்ளது. Paytm UPI மற்றும் Paytm Wallet மூலம் செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக்கை உறுதி. Flipkart வாடிக்கையாளர்கள் ‘பிக் பில்லியன் டே ஸ்பெஷல்’ விற்பனையில் பிராண்டட் தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடியை எதிர்பார்க்கலாம்.

Poco F4, Pixel 6a, Poco X4 Pro 5G, Oppo Reno 8, Motorola Edge 30, Realme 9 5G, Poco C31, Vivo T1 5G மற்றும் Samsung F13 ஸ்மார்ட்போன்களில் பிளிப்கார்ட் மிகப்பெரிய சலுகைகளை வழங்க வாய்ப்புள்ளது. Flipkart Big Billion Days விற்பனையானது Noise, Asus மற்றும் Poco ஆகியவற்றால் ஸ்பான்சர் செய்யப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் இந்த பிராண்டுகளிலிருந்து கூடுதல் தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 6a-ல் சுவாரஸ்யமான தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். Flipkart நிறுவனம் கேமிங் மடிக்கணினிகளில் 40 சதவீதம் வரை தள்ளுபடியும், மானிட்டர்கள் மற்றும் பிரிண்டர்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்க இருக்கிறது. டிவி மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்க ஆர்வமுள்ளவர்களுக்கும் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். ICICI வங்கி மற்றும் Axis வங்கி கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். 

மேலும் படிக்க |  ஆதார் எண் - போலி சிம் கார்டுகள் மோசடி; கண்டறியும் எளிய முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News