Flipkart சலுகை: 20 ஆயிரம் வரை தள்ளுபடி; Realme வாங்க சரியான நேரம்

Realme Festive Days விற்பனை டிசம்பர் 9 அன்று ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart இல் தொடங்கியது, இதில் Realme ஸ்மார்ட்போன்களில் அற்புதமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2021, 12:33 PM IST
Flipkart சலுகை: 20 ஆயிரம் வரை தள்ளுபடி; Realme வாங்க சரியான நேரம் title=

புதுடெல்லி: நீங்கள் புதிய ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) ரியல்மி பண்டிகை நாட்கள் (Realme Festive Days) சிறப்பு விற்பனை நடந்து வருகிறது, இதில் ரியல்மி இன் அனைத்து ஸ்மார்ட்போன்களும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். இன்று நாம் Realme GT Neo 2 ஸ்மார்ட்போன் பற்றி காண உள்ளோம். இந்த ஸ்மார்ட்போனை  நீங்கள் 20 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி விலையில் வாங்கலாம். இதன் மூவகு விவரத்தை இங்கே காண்போம்.

20 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி
இந்த ஒப்பந்தத்தில் Realme GT Neo 2 பற்றி காண உள்ளோம். இது 5G ஸ்மார்ட்போன் ஆகும். இதன் ஒரிஜினல் விலை ரூ.34,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் 8% தள்ளுபடியில் கிடைக்கும். தள்ளுபடிக்கு பிறகு இந்த ஃபோன் ரூ.31,999க்கு விற்கப்படும். Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கு 5% கேஷ்பேக் அதாவது ரூ.1,600 வழங்கப்படும். இதன் மூலம் இந்த போனை ரூ.31,999க்கு பதிலாக ரூ.30,399க்கு பெறலாம்.

ALSO READ:iPhone-ல் வருகின்றன அட்டகாசமான புதிய அம்சங்கள்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி 

இந்த ஒப்பந்தத்தில் பரிமாற்றச் சலுகை சேர்க்கப்பட்டுள்ளது
Flipkart இன் இந்த ஒப்பந்தத்தில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் ரூ.15,450 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,399லிருந்து வெறும் ரூ.14,949 ஆகக் குறையும். இந்த வழியில், இந்த ஒப்பந்தத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.20,050 தள்ளுபடியைப் பெறலாம்.

Realme GT Neo 2 இன் அம்சங்கள்
ரியல்மி இன் இந்த 5G ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. Qualcomm Snapdragon 870 செயலியில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில், 6.62-inch Full HD + AMOLED டிஸ்ப்ளே கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது, இதில் பிரதான சென்சார் 64MP, வைட் ஆங்கிள் லென்ஸ் 8MP மற்றும் மேக்ரோ லென்ஸ் 2MP உள்ளது. செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும், 16MP முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது.

ALSO READ:Flipkart Sale: வெறும் 4 ஆயிரம் ரூபாய்க்கு புது Samsung 5G Phone 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News