Video தேடலை எளிதாக்க புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது Facebook!!

Facebook-ன் இந்த அம்சம் அமெரிக்காவிலிருந்து தொடங்கப்படும். அதில் உங்கள் விருப்பப்படி பக்கங்களையும் நீங்கள் சர்ச் செய்ய முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2020, 04:18 PM IST
  • பேஸ்புக்கில் வீடியோக்களைப் பார்ப்பது எளிதானது.
  • இப்போது பிடித்த வீடியோக்களை அனுபவிக்க புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்த பிரிவில் உள்ள வீடியோக்கள் Facebook-ஆல் தேர்ந்தெடுக்கப்படும்.
Video தேடலை எளிதாக்க புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது Facebook!! title=

சான் பிரான்சிஸ்கோ: பேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் பல வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. நமது டைம் லைனிலும் நாம் பல வீடியோக்களை காண்கிறோம். சில நேரங்களில் சில வீடியோக்களை (Facebook Videos) நாம் மீண்டும் காண ஆசைப்படுவோம். ஆனால் அவற்றை நம்மால் எளிதாகத் தேட முடிவதில்லை.

இப்போது Facebook தனது வீடியோ தளத்தில் சில அற்புதமான அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 125 கோடி பயனர்கள் இந்த தளத்தை பார்வையிட்டு அனைத்து வகையான வீடியோக்களையும் ரசிக்கிறார்கள்.

Facebook Watch-ன் சிறப்பு என்னவென்றால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு, செய்தி, இசை வீடியோக்கள், நேரடி நிகழ்வுகள் போன்ற பல வீடியோக்கள் பயனர்களின் பொழுதுபோக்குக்காக இதில் கிடைக்கின்றன.

Facebook திங்களன்று ஒரு அறிக்கையில், 'இப்போது உங்களுக்கு பிடித்த பக்கம் அல்லது ஃப்ரொஃபைலை ஃபாலோ செய்வதோடு, உங்களுக்கு பிடித்த தலைப்பையும் ஃபாலோ செய்யலாம். தலைப்புகளின் உதவியுடன், உங்கள் ஊட்டத்தில் காட்டப்பட்டுள்ள வீடியோக்களை நீங்கள் தனித்துவப்படுத்திக் கொள்ளலாம். அதாவது இனி உங்களுக்குத் தேவையான உள்ளடக்கங்கள் மட்டும்தான் உங்கள் ஃபீடில் வரும்.’ என்று கூறியுள்ளது.

ALSO READ: நிலவில் கூடிய விரைவில் 4G Network: அசத்தும் NASA, Nokia ஜோடி!!

இந்த அம்சம் அமெரிக்காவிலிருந்து தொடங்கப்படும். அதில் உங்கள் விருப்பப்படி பக்கங்களையும் நீங்கள் சர்ச் செய்ய முடியும். இதன் மூலம் நீங்கள் அவற்றை ஃபாலோவும் செய்யலாம். அமெரிக்கா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில சந்தைகளில், பயனர்கள் user watch-ல் 'what’s happening’ மற்றும் 'featured' போன்ற பிரிவுகளைக் காண முடியும்.

'இந்த பிரிவில் உள்ள வீடியோக்கள் Facebook-ஆல் தேர்ந்தெடுக்கப்படும். எனவே தொலைக்காட்சி, அகாடமி, ஆண்டு எம்மி விருதுகள், எம்.எல்.பி உலக தொடர் சிறப்பம்சங்கள் போன்ற சமீபத்திய மற்றும் யதார்த்தமான உள்ளடக்கங்களை நீங்கள் இதில் கண்டு மகிழலாம்’ என நிறுவனம் மேலும் தனது அறிக்கையில் கூறியுள்ளது. 

ALSO READ: 3 தமிழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட Nano Satellite-ஐ செலுத்தவுள்ளது NASA

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News