சமூக ஊடகங்கள், ஆன்லைன் செய்தி தளங்கள் ஆகியவை தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்ப, தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழு ஜனவரி 21 ஆம் தேதி ஆஜராகும் படி பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மக்களவை (Lok Sabha) வலைத்தளத்தில் இந்த சந்திப்பு பற்றி வெளியிடப்பட்டுள்ள அட்டவணை பின்வருமாறு: "மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பிரதிநிதிகளின் சான்றுகள் மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சமூக / ஆன்லைன் செய்திகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது என்ற தலைப்பில் பேஸ்புக் மற்றும் ட்விட்டரின் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்பது. டிஜிட்டல் தளத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து உறுதிபடுத்துவது.”
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சஷி தரூர் (Shashi Tharoor) குழுவின் தலைவராக உள்ளார். இந்த குழு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமைக்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட வால் ஸ்ட்ரீட் அறிக்கைக்குப் பிறகு, வெளிப்படையான அரசியல் சார்புகளைக் காட்டியதற்காக சமூக ஊடக (Social Media) நிறுவனமான ஃபேஸ்புக் சர்ச்சைக்கு ஆளானது. வளர்ந்து வரும் சமூக ஊடக தளங்களுக்கு மத்தியில் சமூகப் பொறுப்பு மற்றும் கடமையை அதிகரிப்பதை புதிய நிலைக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்னதாக, சமூக ஊடக தளத்தில் அரசியல் சார்பு விவகாரம் தொடர்பாக பேஸ்புக்கின் இந்தியத் தலைவர் அஜித் மோகனை இந்த குழு அழைத்திருந்தது.
ALSO READ: வேலையை காட்டும் தடுப்பூசி; Covid தடுப்பூசி போட்டுக்கொண்ட வார்டு பாய் உயிரிழப்பு..!
பாஜகவிற்கான (BJP) பேஸ்புக் சார்பு குற்றச்சாட்டுகள் பற்றி ஆகஸ்ட் 2020 இல் தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டன. மேலும் ஃபேஸ்புக்கின் அப்போதைய இந்திய கொள்கை தலைவராக இருந்த அங்கி தாஸ், பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க இடுகைகளை அகற்றும் யோசனையை எதிர்த்ததாக அறிக்கை சுட்டிக்காட்டியது. இது அவர்களுக்கு பாதகாமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது. தாஸ் இப்போது பேஸ்புக்கில் பணிபுரியவில்லை.
டிசம்பர் மாதத்தில், மற்றொரு வால் ஸ்ட்ரீட் ஜர்ணல் அறிக்கை சமூக ஊடக ஊழியர்கள், தங்கள் சொந்த ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக அரசியல் சார்புகளைக் காட்டியதாகக் கூறியது.
ஆகஸ்டில், குழுவின் காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களுக்கும் பேஸ்புக் அதிகாரிகளின் வாய்வழி பதில்களில் திருப்தி ஏற்படவில்லை. குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதிலை வழங்குமாறு நிர்வாகிகளிடம் குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR