Netflix Tips: இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களுடன், OTT இன் ட்ரெண்டும் மிகவும் அதிகரித்துள்ளது. திரைப்படங்களைப் பார்ப்பதோடு, மக்கள் தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளையும் இந்த OTT இயங்குதளங்களில் வீட்டில் இருந்தபடியே பார்க்க விரும்புகிறார்கள்.
நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் (Amazon Prime) வீடியோ போன்ற இந்த இயங்குதளங்களுக்கு பணம் செலுத்த வேண்டும். மேலும், ஸ்ட்ரீமிங் செய்யும்போது இவை உங்களது தரவையும் அதிகமாக பயன்படுத்தி விடுகின்றன. Netflix ஐப் பயன்படுத்தும் போது உங்கள் மொபைல் டேட்டாவைச் சேமிக்கும் சில குறிப்புகளை இந்த பதிவில் காணலாம்.
Netflix கணக்கில் டேட்டா வேகத்தை டெஸ்ட் செய்யவும்
Netflix பயன்படுத்தும் பயனர்கள் ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனியாக தரவு அமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வசதி உள்ளது. மேலும், Netflix-ல் உங்கள் டேட்டா வேகத்தையும் பார்க்கலாம்.
இதற்கு, செயலியில், ‘மெனு’-வில் சென்று, செயலி அமைப்புகளின் (App Setting) ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, 'டைக்னோஸ்டிக்ஸ்’-க்குச் சென்று, இங்கிருந்து உங்கள் தரவு வேகத்தை டெஸ்ட் செய்யலாம்.
ALSO READ:இன்று OTTயில் ரிலீசான 14 படங்களின் பட்டியல் இதோ!
டேட்டா செட்டிங்சில் இந்த மாற்றங்களைச் செய்யவும்
நெட்பிளிக்சில் தரவு அமைப்புகளையும் (Data Settings) நீங்கள் மாற்றலாம். இதைச் செய்ய, முதலில் டேட்டா செட்டிங்கிற்கு சென்று, பின்னர் வீடியோ பிளேபேக்கிற்குச் சென்று தரவு பயன்பாட்டைத் (Data Usage) தேர்ந்தெடுத்து, 'டவுன்லோட் டேட்டா செட்டிங்ஸ்’-ஐ அட்ஜ்ஸ்ட் செய்து, பின்னர் நீங்கள் விரும்பும் அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
நெட்ஃபிக்ஸ் அதன் பயனர்களுக்கு நான்கு அமைப்புகளில் இருந்து தேர்வு செய்யும் வசதியை வழங்குகிறது: அவை, ஆடோமேட்டிக், வை-ஃபை ஒன்லி, சேவ் டேட்டா மற்றும் மாக்சிமம் டேட்டா ஆகியவை ஆகும்.
வீடியோ தரத்தை சரிசெய்யவும்
நெட்பிளிக்சில் திரைப்படம் அல்லது பிற நிகழ்ச்சிகளைக் காணும்போது, தரவை சேமிப்பதற்கான மிகச்சிறந்த வழி, வீடியோ தரத்தை சரிசெய்வதாகும். நெட்பிளிக்சில் நிகழ்ச்சிகளையும் பார்த்து உங்கள் மொபைல் டேட்டாவையும் நீங்கள் சேமிக்க விரும்பினால், அதற்கு உங்கள் வீடியோக்களின் தரத்தைக் குறைக்க வேண்டும்.
சிறந்த தரத்தில் பார்க்கும் போது, அதிக தரவு பயன்படுத்தப்படுகிறது. எனவே டேட்டாவை சேமிக்க வேண்டும் என நினைத்தால், தரத்தை சிறிது குறைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி மூலம், நீங்கள் Netflix பார்க்கும்போது மொபைல் தரவை (Mobile Data) சேமிக்கலாம். மேலும் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் எந்த இடையூறும் இல்லாமல் பார்த்து ரசிக்கலாம்.
ALSO READ:இந்தியாவில் இவளோ பேர் OTT தளங்களை பயன்படுத்துகிறார்களா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR