IRCTC To Check Seat Vacancy In Running Train: இந்தியன் ரயில்வே என்பது மக்களுக்கு மிகப்பெரிய சேவையை தினந்தோறும் அளிக்கக்கூடிய ஒன்றாகும். பொது போக்குவரத்தில் ரயிலும் இன்றியமையாததாக உள்ளதால், அதன் சேவையையும் உலகத்தரத்தில் இருப்பது அவசியமாகிறது. அந்த வகையில், ரயில்வேயின் IRCTC தளம் என்பது உலகத்தரத்திலானது எனலாம். லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தளம், டிக்கெட் பதிவில் இருந்து ரயில் குறித்த அத்தனை தகவல்களையும் பயனர்களுக்கு வழங்குகிறது.
அவசர பயணமா...?
அந்த வகையில், IRCTC செயலி மற்றும் இணையதளம் மூலம் தங்களின் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. ஆனால், முன்பதிவு செய்ய நீங்கள் அந்த பயணம் குறித்து திட்டமிட்டிருக்க வேண்டும். சில சமயங்களில் திடீரென எங்காவது செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அந்த நேரத்தில் ரயிலில் முன்பதிவு செய்ய முடியாது.
முன்பதிவு இல்லாமல் ரயிலில் பயணம் செய்வது மிக மிக கடினம் என்பது ரயிலில் தொடர்ச்சியாக பயணிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடிக்கடி ரயில் நிலையத்திற்குச் சென்று டிடிஆரிடம் பேசி, ரயிலில் காலியாக உள்ள இருக்கைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு டிக்கெட் வாங்குபவர்களும் இருக்கிறார்.
மேலும் படிக்க | அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! IRCTC வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ்
ஓடும் ரயிலின் தகவல்கள்
ஆனால், பல சமயங்களில் ரயில் நிலையத்தை அடைந்ததும் ரயிலில் இருக்கைகள் காலியாக இல்லை என்றால் பெரிய ஏமாற்றம் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க, நீங்கள் ரயில் நிலையத்திற்கு செல்லாமலேயே ஒரு ரயிலில் இருக்கைகள் காலியாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு அதை உறுதி செய்துகொள்ளலாம். அதாவது, ஓடும் ரயிலும் காலியாக உள்ள இருக்கைகளை நீங்கள் செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
வீட்டில் இருந்தபடியே IRCTC செயலி மூலம் ஓடும் ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் பற்றிய தகவல்களைப் பெறலாம். இதன் சிறப்பு என்னவென்றால், இதற்காக நீங்கள் IRCTC செயலியில் லாக்-இன் வேண்டிய அவசியமில்லை. அதாவது, ரயிலின் காலி இருக்கையை பார்ப்பதற்கு ரயில் நிலையத்திற்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்குவதற்கு பதில் வீட்டிலேயே பயனர்கள் டிக்கெட் எடுக்கலாம்.
IRCTC செயலியில் 'Chart Vacancy' எனப்படும் மிகவும் பயனுள்ள அம்சம் உள்ளது. இந்த வசதியின் மூலம் ஓடும் ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் குறித்த தகவல்களைப் பெறலாம். திடீரென நீங்கள் எங்காவது செல்ல திட்டமிட்டிருந்தாலும், டிக்கெட்டை முன்பதிவு செய்யவில்லை என்றால், ஓடும் ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் பற்றிய தகவல்களை எப்படி பார்ப்பது என்பது குறித்து இதில் காணலாம்.
ஓடும் ரயிலில் காலி இருக்கைகளை பார்க்கும் வழிமுறைகள்:
- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் IRCTC செயலியைத் திறக்கவும்.
- இதற்குப் பிறகு, செயலியில் தெரியும் 'Train' ஐகானைக் கிளிக் செய்யவும்.
- இங்கே நீங்கள் 'Chart Vacancy' என்ற ஆப்ஷனை காண்பீர்கள்.
- Chart Vacancy என்பதை கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு உங்கள் பெயரையும், நீங்கள் பயணிக்க விரும்பும் ரயிலின் எண்ணையும் உள்ளிடவும்.
- இப்போது நீங்கள் ரயில் ஏற விரும்பும் நிலையத்தை தேர்வு செய்யவும்.
- இதன் பிறகு அந்த ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் பற்றிய தகவல் கிடைக்கும்.
முன்னர் கூறியது போன்று, IRCTC செயிலியின் மூலம் இந்த 'Chart Vacancy' அம்சத்தைப் பயன்படுத்த, நீங்கள் அந்த செயலியில் லாக்-இன் செய்ய வேண்டிய அவசியமில்லை.
IRCTC இணையதளம் காலி இருக்கைகளை பார்க்கும் வழிமுறைகள்:
- முதலில் IRCTC இணையதளத்தைத் திறக்கவும்.
- இப்போது முகப்புப பக்கத்தில், அடுத்துள்ள "Charts/Vacancy" என்ற ஆப்ஷனை திரையில் காண்பீர்கள்.
- இந்த ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது "Reservation Chart" என்ற திரையில் தோன்றும்.
- இப்போது தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, Get Train Chart என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதன் பிறகு ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் பற்றிய தகவல்களைப் பெற முடியும்.
மேலும் படிக்க | இவ்வளவு கம்மி விலையில் துபாய்க்கு செல்லலாமா, IRCTC அசத்தலான டூர் பேக்கேஜ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ