மினியேச்சர் ரோபோக்களுக்காக ஒளியால் இயக்கப்படும் ஏவுகணை அமைப்பை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோ, மருத்துவம், விவசாயம், விண்வெளி மற்றும் பாலிஸ்டிக்ஸ் என பல்வேறு துறைகளில் பயன்படுத்தலாம். அதேபோல், ஒளியைப் பார்த்தாலே தோட்டாவைப் போல இந்த ரோபோ துரிதமாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரோபோவின் மென்மையான ஹைட்ரஜல் மற்றும் கிராபெனின் லாஞ்சர், 0.3 மில்லி விநாடிகளில் ஆற்றலை வெளியிடுகிறது. ஈரமான மற்றும் வறண்ட மேற்பரப்புகளில் செயல்படும் ரோபோ, தனது உயரத்தை விட 643 மடங்கு தூரத்தை கடக்க உதவுகிறது என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் இந்த புதிய தொழில்நுட்பம், மருத்துவ ரோபோக்கள்,விவசாயத்தில் உதவும் ரோபோக்கள் என பல துறைகளில் உதவக்கூடிய ரோபோக்களை உருவாக்க உதவும். மேலும் மென்மையான தோட்டாவைப் போலப் பயன்படுத்தப்படும் திறனையும் இந்த ரோபோக்கள் கொண்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு நுட்பம், இந்த ரோபோவை மேலும் சிறப்பானதாக மேம்படுத்தியிருக்கிறது.
குதித்தல், வெளியேற்றுதல், கேடாபுல்டிங் போன்ற உந்துவிசை திறன்கள் அதிக அளவில் தேவைப்படும் ரோபோட்டிக் பணிகளுக்கான ஆற்றல்-பெருக்க உத்தி தரும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முனைந்திருந்த சீனா தற்போது அதைக் கண்டறிந்துவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்தில், சேமித்து வைக்கப்பட்ட ஆற்றலில் இருந்து இயக்க ஆற்றல் உருவாக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் விவரங்கள், நேச்சர் மெட்டீரியல்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதுமான உந்து சக்தியை உருவாக்க, ரோபோக்கலுக்கு குறுகிய காலத்தில் ஆற்றல் வெளியீடு தேவைப்படுகிறது.
வேதியியல் அல்லது மீள் ஆற்றலைச் சார்ந்து இருக்கும் முறைகள், சிக்கலான புனையமைப்பு, நீண்ட ஆற்றல் வெளியீட்டு காலங்கள் மற்றும் போதுமான ஆற்றல் சேமிப்பு என பல விஷயங்களை அடங்கியதாக இந்த ரோபோ இருக்கும்.
ஜி-ஹைட்ரோஜெல் லாஞ்சர்
ஜி-ஹைட்ரோஜெல் லாஞ்சர் சிறியதாக இருக்கும், வட்டு வடிவத்தைக் கொண்டதாக இருக்கிறது. அதன் விட்டம் 7 மிமீ மற்றும் 3 மிமீ தடிமன் கொண்டது. இது 1.93 (6.33 அடி) மீட்டருக்கு மேல் செங்குத்தாக நகரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜி-ஹைட்ரோஜெல் லாஞ்சரின் இயக்க செயல்திறன் என்பது, தற்போதைய அனைத்து பொறியியல் மினியேச்சர் ரோபோ அமைப்புகளையும் விட அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆழமான திசு மாதிரி, ஸ்டென்ட் டெலிவரி, திசுப் பிரித்தல் உட்பட சக்தி வெளியீடு தேவைப்படும் வேலைகளிலும், சக்தி பெருக்க உத்தி மருத்துவ ரோபோக்களிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம். ரோபோவை எப்படி ஏவுவது என்பதை இன்னும் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ