புதுடெல்லி: கடந்த ஒரு வாரத்தில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. இதில் முதலில் ஏர்டெல் தனது திட்டங்களின் விலையை உயர்த்தியது. அதன் பிறகு Vi மற்றும் Reliance Jio நிறுவனங்களும் இந்த திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளன. இதில் ஜியோ (Reliance Jio) தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை நேற்று முன்தினம் உயர்த்தியுள்ளது மற்றும் புதிய விலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும்.
இத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் மலிவான திட்டங்களைக் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாகிவிட்டது. குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் இலவச SMS போன்ற பலன்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன்படி ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் Vi (Vodafone Idea) இன் 200 ரூபாய்க்கு கீழ் உள்ள திட்டங்களைப் பற்றி இக்கே காண்போம்.
ALSO READ | Jio vs Airtel vs Vi: உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் ரீசார்ஜ் திட்டம் எது?
ரூ. 200க்கு கீழ் Airtel ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஏர்டெல் ரூ.179 திட்டம்: ஏர்டெல் நிறுவனம் ரூ.149 திட்டத்தின் விலையை ரூ.179 ஆக உயர்த்தியுள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். இதனுடன், அமேசான் பிரைம் வீடியோ மொபைல், WYNK மியூசிக் இலவச சந்தா ஆகியவை கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.155 திட்டம்: ஏர்டெல்லின் ரூ.155 திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்களாக இருக்கும். இதில், 1ஜிபி டேட்டா, இலவச அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இதனுடன், அமேசான் பிரைம் வீடியோ மொபைல், WYNK மியூசிக் இலவச சந்தா ஆகியவை கிடைக்கிறது.
ரூ.200க்கு கீழே Vi ப்ரீபெய்டு திட்டங்கள்
Vi இன் ரூ.179 திட்டம்: இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும், இதில் வரம்பற்ற அழைப்பு, 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் கிடைக்கும்.
Vi இன் ரூ 199 திட்டம்: இந்த திட்டம் 18 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்த திட்டத்தில் Vi Movies & TVக்கான அணுகலும் வழங்கப்படுகிறது.
ரூ.200க்கு கீழ் Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஜியோ ரூ 199 திட்டம்: ஜியோவின் ரூ.199 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதனுடன், பயனர்கள் JioTV, JioCinema, JioNews மற்றும் JioSecurity உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலைப் பெறுகின்றனர்.
ஜியோவின் ரூ.149 திட்டம்: வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை 24 நாள் வேலிடிட்டியுடன் கிடைக்கும். இந்த திட்டத்தில், JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான அணுகல் கிடைக்கிறது.
ALSO READ | வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR