OpenAI-ன் CHATGPT அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஏஐ தொழில்நுட்பம் புதிய பரிமாணத்தையும், உயரத்தையும் எட்டியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் எந்த எல்லை வரை செல்லலாம் என்ற நம்பிக்கையும் பிறந்திருக்கிறது. எத்தகைய கடினமான வேலைகளையும் நொடியில் முடித்துக் கொடுத்துவிடும் இந்த சாட்ஜிபிடி மற்றும் ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளை பெற்றுக் கொண்டே இருக்கிறது.
அந்தவகையில் இனி வாட்ஸ்அப் சாட்களுக்கும் சாட்ஜிபிடியே பதில் அளித்துவிடும். உங்களுக்கு சோர்வாக இருந்தாலோ அல்லது வாட்ஸ்அப் செய்திகளை படிக்கும் அளவுக்கு நேரமின்மை இருந்தாலோ நீங்கள் இனி கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு பதிலாக வாட்ஸ்அப்பில் வரும் செய்திகளுக்கு உடனடியாக சாட்ஜிபிடி ரிப்ளை கொடுத்துவிடும். இதற்கு ஹிட்ஹப் துணை வேண்டும். டெவலப்பர் டேனியல் கிராஸ் இந்த அம்சத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார்.
மேலும் படிக்க | ChatGPT: இடியாப்ப சிக்கலில் சீனா..! புதிய ஏஐ உருவாக்க திட்டம்
வாட்ஸ்அப்பில் சாட்ஜிபிடி பயன்படுத்த தொடங்கும் முன்பு ஒரு முக்கியமான விஷயத்தை அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால் சாட்ஜிபிடி அல்லது கூகுள் அல்லது மெட்டாவின் அதிகாரப்பூர்வ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட செயல்முறை இது அல்ல. தொழில்நுட்ப உதவிகளுடன் அவரவர் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் இதனை சாட்ஜிபிடி மற்றும் வாட்ஸ்அப் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் சாட்ஜிபிடியுடன் வாட்ஸ்அப்-ஐ இணைக்க வேண்டும் என்றால் ஹிட்ஹப் சென்று தேவையான மொழி பைல்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன்பின்னர், அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழிக்காட்டலின் அடிப்படையில் நீங்கள் வாட்ஸ்அப்பில் சாட்ஜிபிடியை இணைத்துக் கொள்ளலாம். யூடியூப்பில் இது தொடர்பான விளக்க வீடியோக்கள் அதிகம் இருக்கின்றன. படித்து உபயோகப்படுத்த முயற்சிப்பதைவிட, வீடியோ உங்களுக்கு தெளிவான விளக்கத்தையும், உடனடியாக செயல்படுத்தவும் உதவும்.
மேலும் படிக்க | பிரதமர் மோடி இருக்காரே... சட்டென சொன்ன ChatGPT - சர்ச்சை லிஸ்ட் பெரிசா போகுது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ