Amazon Flipkart Sale: மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி-க்களை அள்ளிச்செல்லும் மக்கள்

சியோமியின் தயாரிப்புகள் mi.com, அமேசான் கிரேட் இந்தியன் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஆகியவற்றிலும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2021, 01:38 PM IST
  • இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது.
  • சியோமி, 3 நாள் விற்பனையில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட் டிவிகளை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
  • மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிதாக ஏதாவது செய்ய முயற்சிப்போம்-சியோமி.
Amazon Flipkart Sale: மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி-க்களை அள்ளிச்செல்லும் மக்கள் title=

Amazon Flipkart Sale: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. இந்த வேளையில், மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்குகிறார்கள். நிறுவனங்கள் நுகர்வோர் என இரு தரப்புக்கும் இந்த வேளையில் நல்ல லாபம் கிடைக்கிறது. 

ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானின் (Amazon) முதன்மை நிகழ்வுகளின் போது டாப் பிராண்டான சியோமி இந்தியா (Xiaomi India) அதிக பயனடைந்துள்ளது. சியோமி, 3 நாள் விற்பனையில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட் டிவிகளை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 

பிராண்டின் முதன்மை நிகழ்வான 'தீபாவளி வித் மி' பிராடக்டுகளுக்கு பெரும் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்குகிறது. சியோமியின் தயாரிப்புகள் mi.com, அமேசான் கிரேட் இந்தியன் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஆகியவற்றிலும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சியோமி இந்தியா கூறியது என்ன? 

இந்த சேலில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, சியோமி இந்தியா ஸ்மார்ட் டிவி பிரிவின் தலைவர் ஈஸ்வர் நீலகண்டன், "நாங்கள் ஸ்மார்ட் டிவி பிரிவில் நுழைந்தபோது, ​​சந்தையில் உள்ள சாத்தியக்கூறுகளை நாங்கள் கண்டறிந்தோம். எங்கள் நோக்கம் 'ஒவ்வொரு இந்திய வீட்டிற்கும் ஸ்மார்ட் டிவி' என்பதாகும். Redmi மற்றும் Mi  ஆகியவை மிகவும் பிரபலமாகி விட்டன. ஒரு சாதாரண மனிதனுக்குத் தேவையான அனைத்தும் டிவியில் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். குறைந்த செலவில் அதிக வசதிகளை வழங்குவதாக நாங்கள் நம்புகிறோம். மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிதாக ஏதாவது செய்ய முயற்சிப்போம்." என்று கூறினார்.

ALSO READ: பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்யும் முன் இந்த வீடியோவை ஒரு தரம் பாருங்கள்! 

இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளில் அட்டகாச விற்பனை

அமேசானில் பட்டியலிடப்பட்ட முதல் 10 சிறந்த விற்பனையான ஸ்மார்ட் டிவிகளில் அதன் 8 தயாரிப்புகளைச் சேர்த்து, முதல் பண்டிகை விற்பனையின் போது சியோமி (Xiaomi) தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. Redmi Smart TV X 50”, Mi TV 4A 32”, Mi TV 5X 43” ஆகிய இந்த மூன்று டிவிகளும் மக்களின் ஏகோபித்த ஆதரவையும் ஆர்டர்களையும் பெற்றன.

இந்த மூன்று தொலைக்காட்சிகளின் விலையை தெரிந்து கொள்வோம்:

Redmi Smart TV X Series - ரூ .31,749
Redmi Smart TV 32” - ரூ 13,249
Redmi Smart TV 43”- ரூ. 22,749
Mi TV 5X Series - ரூ .43,499
Mi TV QLED 4k - ரூ 57,749
Mi TV QLED 75 - ரூ 1,23,749

ALSO READ: பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனை; ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News