56GB டேட்டா... அன்லிமிடட் டேட்டா - ஜியோவின் பம்பர் ப்ரீபெய்ட் திட்டம்!

Jio Rs. 299 Recharge Plan: மலிவு விலையில் எக்கச்சக்க பலன்களை அளிக்கும் ஜியோவின் சிறப்பான ரீசார்ஜ் திட்டத்தை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 17, 2023, 03:24 PM IST
  • இந்த திட்டத்தின் விலை ரூ. 299 ஆகும்.
  • இதன் வேலிடிட்டி 28 நாள்களாகும்.
  • ஜியோ மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக உள்ளது.
56GB டேட்டா... அன்லிமிடட் டேட்டா - ஜியோவின் பம்பர் ப்ரீபெய்ட் திட்டம்! title=

Jio Rs. 299 Recharge Plan: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியளிக்கும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என் அனைத்து வகையிலான திட்டங்களும் நடுத்தர வர்க்கத்தினரை கவரும் வகையில் உள்ளது. குறிப்பாக டேட்டா வசதி போன்றவற்றையும் பல்வேறு வகையில் வழங்குகிறது. 

அந்த வகையில் ஜியோ பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கினாலும், ஒவ்வொரு சலுகையிலும் நீங்கள் தேவையான அல்லது முழுமையான பலன்களைப் பெறுகிறீர்களா இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அனைத்து நன்மைகளையும் வழங்கும் திட்டங்களுக்கு அதிக விலை உள்ளது என்பதும் ஒத்துக்கொள்ள வேண்டி உள்ளது. 

நீங்கள் மலிவு விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால் ஜியோ ஒரு சிறப்பான திட்டத்தைக் கொண்டுள்ளது. அது மலிவு மற்றும் நல்ல பலன்களையும் கொண்டுள்ளது. எனவே இது அந்த ரீசார்ஜ் திட்டம் குறித்தும், அதில் சேர்க்கப்பட்ட நன்மைகளையும் இங்கே காணலாம்.

மேலும் ப டிக்க | ஜியோ: இந்த பிளானில் இனி 21 ஜிபி கூடுதலாக கிடைக்கும்!

மேலே குறிப்பிடப்பட்ட ஜியோவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.299 ஆகும். இது மலிவு விலையில் கிடைக்கும் பல வசதிகள் உள்ள ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்றாகும். இது மிகவும் பிரபலமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்றாகும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதைப் பயன்படுத்தினால், பலவிதமான நன்மைகளைப் பெறுவீர்கள். இந்த நன்மைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், அந்த திட்டம் குறித்து இதில் முழுமையாக பார்க்கலாம்.

சேர்க்கப்பட்ட நன்மைகள்

நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகும் ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் மிகவும் வலுவானவை. முதலில், இந்த ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில், 28 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா சேர்க்கப்பட்டால், அது 56GB ஆக மாறும். ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒவ்வொரு நாளும் 100 SMS-களை பெறுகிறார்கள். இந்த ரீசார்ஜ் திட்டம் சிக்கனமானது மற்றும் இதுபோன்ற பல வசதிகளை வழங்குகிறது.

இது ஒருபுறம் இருக்க, நல்ல பலனை வழங்கும் ஓராண்டுக்கான ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை 3 ஆயிரத்து 662 ரூபாய் ஆகும். இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா மற்றும் பிற அம்சங்கள் உள்ளன. மேலும், இது எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல் தொடங்கப்பட்டது. ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் செய்வதில் உள்ள தொந்தரவைத் தவிர்த்து, அதிக டேட்டாவைப் பயன்படுத்த விரும்பினால், இந்தத் திட்டம் நன்றாக இருக்கும். இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | ஜியோவின் திடீர் சர்ப்ரைஸ்... ஓடிடிகள் இலவசம், பம்பர் பலன்கள் - ஆண்டுக்கு இவ்வளவுதான்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News