புதுடெல்லி: மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பது மட்டுமல்லாமல், வழக்கமான எரிபொருளில் இயங்கும் வாகனங்களை விடவும் சிறந்ததாகவும் உள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால், தற்போது ஏராளமானோர் மின்சார வாகனங்களை வாங்குகின்றனர்.
எரிபொருள் வாகனங்களை விட மின்சார வாகனத்தை இயக்குவதற்கு குறைவான செலவே ஆகிறது. நீங்கள் மின்சார வாகனம் வாங்க விரும்பினால், வருமான வரியில் பெரும் விலக்கு பெறலாம்.
கடனில் பெரும் தள்ளுபடியை பெறலாம்
கார்கள் சொகுசுப் பொருட்களின் கீழ் வருவதால்,வருமான வரி விதிகளின்படி, ஒருவர் கார் வாங்கினால், அதற்கு அவர் வாங்கும் கடனுக்கு எந்த வித வரி விலக்கும் (Tax Exemption) கிடைக்காது. ஆனால் இப்போது மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், புதிய பிரிவு 80EEB இன் கீழ் கடன்களுக்கு வருமான வரி விலக்கு பெறலாம்.
இந்திய அரசு 80EEB என்ற புதிய பிரிவைச் சேர்த்துள்ளது. இதனால், பலவித நன்மைகளுடன் வரி விலக்கும் கிடைப்பதால், அதிகமான மக்கள் வழக்கமான எரிபொருள் வாகனங்களிலிருந்து மின்சார வாகனங்களுக்கு மாறி வருகிறார்கள்.
ALSO READ: Electric Vehicles விலை குறையவுள்ளன: குட் நியூஸ் அளித்த அமைச்சர்
சில ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 80EEB பிரிவின் கீழ் மின்சார வாகனத்தை கடனில் வாங்கினால் ரூ. 1.5 லட்சம் வரை வட்டி மானியம் கிடைக்கும். இந்த வரிவிலக்கு இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் என இரண்டு விதமான மின்சார வாகனங்களுக்கும் (Electric Vehicles) கிடைக்கும்.
பிரிவு 80EEB இன் கீழ் விலக்கு பெறுவதற்கு, பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
- ஒரு நபர் ஒரு முறை மட்டுமே இந்த விலக்கைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது, இதற்கு முன் மின்சார வாகனம் வைத்திருக்காத ஒருவர் மட்டுமே பிரிவு 80EEB இன் கீழ் கடன் விலக்கு பெற முடியும்.
- கடனில் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். மின்சார வாகனத்திற்கான கடனை நிதி நிறுவனம் அல்லது NBFC இலிருந்து பெற வேண்டும்.
- இந்த வரி விலக்கு வணிகங்களுக்கு கிடைக்காது. தனிநபர் மட்டுமே வரி விலக்கின் பலனைப் பெற முடியும்.
- 1 ஏப்ரல் 2019 முதல் 31 மார்ச் 2023 வரை மின்சார வாகனம் வாங்குவதற்கான கடனில் (Loans) வருமான வரி விலக்கு பெறலாம். பிரிவு 80EEB இன் கீழ் 2020-2021 நிதியாண்டிலிருந்து வரி விலக்கு பெறலாம்.
ALSO READ: உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும் அட்டகாசமான மின்சார வாகனங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR