Vivo தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் Vivo V21 5G-ஐ இந்தியாவில் இந்த மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைபேசியின் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சங்கள் இதன் 44 மெகாபிக்சல் செல்பி கேமரா மற்றும் மீடியா டெக் டைமன்ஷன் 800U பிராசசர் ஆகியவை ஆகும்.
பல வித சலுகைகள் கிடைக்கின்றன
இந்த தொலைபேசி, உலகின் முதல் 44 மெகாபிக்சல் OIS செல்பி கேமரா ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொலைபேசியின் ஆரம்ப விலை ரூ .29,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த தொலைபேசியில் பல வகையான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகளின் மூலம் இந்த போனை மிகவும் மலிவான விலையில் வாங்க முடியும்.
பிளிப்கார்ட், எச்.டி.எஃப்.சி வங்கி கார்டில் சலுகை
பிளிப்கார்ட்டில் (Flipkart) கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த தொலைபேசிக்கு ரூ .3,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது பரிமாற்ற சலுகையாக வழங்கப்படுகிறது. இது தவிர, எச்.டி.எஃப்.சி வங்கி கார்டின் கீழ் 2 ஆயிரம் ரூபாய் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
Vivo V21 5G-யில் 44 மெகாபிக்சல் முன்பக்க கேமரா
Vivo V21 5G-ல் 6.44 இன்ச் முழு எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இது 2404 x 1080 பிக்சல்கள் ரெசல்யூஷனைக் கொண்டது. இதன் ஆஸ்பெக்ட் விகிதம் 20: 9 ஆகும். திரை புதுப்பிப்பு வீதம் 90 ஹெர்ட்ஸ். இந்த தொலைபேசியின் கேமரா மிகவும் நேர்த்தியானது. இந்த தொலைபேசியில் 44 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் ஐ ஆட்டோ ஃபோகஸ் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
ALSO READ: Flipkart Offer: மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாக அறிய வாய்ப்பு
இந்த தொலைபேசியில் 8.0 ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை நீட்டிக்க முடியும். விவோவின் இந்த கைபேசி ஆண்ட்ராய்டு வி 11 இயக்க முறைமையில் இயங்குகிறது. தொலைபேசியின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. பின்புறத்தில் OIS உடன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. தொலைபேசியில் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை உள்ளன.
தொலைபேசியில் 33W அதிவேக சார்ஜிங் உள்ளது
பவரைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் (Smartphone) 4,000 எம்ஏஎச் என்ற திறன் கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இது 33W ஃபிளாஷ் சார்ஜ் வேகமான சார்ஜிங்குக்கான சப்போர்டுடன் வருகிறது. Vivo V21 5G ஒரு மிகச்சிறந்த ஸ்மார்ட்போனாக நிபுணர்களால் சான்றளிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 176 கிராமாகும். இது 7.29 மி.மீ. தடிமனுடன் வருகிறது.
ALSO READ: Vivo V21 5G இல் 2000 ரூபாய் வரை தள்ளுபடி! இன்று ஒரு நாள் மட்டும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR