BSNL அதிரடி திட்டம்.. 500 ஜிபி வரை தரவு.. ஒரு வருடம் செல்லுபடியாகும்.. முழு விவரம்..!

பி.எஸ்.என்.எல் தனது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்காக இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு திட்டங்களின் விலை ரூ .693 மற்றும் ரூ .1,212 ஆகும். இது நீண்ட கால செல்லுபடியாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2020, 03:03 PM IST
BSNL அதிரடி திட்டம்.. 500 ஜிபி வரை தரவு.. ஒரு வருடம் செல்லுபடியாகும்.. முழு விவரம்..! title=

சென்னை: தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் போட்டியாக பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனம் பெரும் சவால் அளித்து வருகிறது. பல சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்களை (எஸ்.டி.வி- Stv)) பயனர்களுக்கு வழங்குகிறது. அதிக தரவுகளை பயனபடுத்தும் பயனர்களுக்கு, பிஎஸ்என்எல் ரூ .693 மற்றும் ரூ .1,212 என இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இவை இரண்டும் சிறப்பு கட்டண வவுச்சர்கள் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டங்கள் 500 ஜிபி வரை தரவை வழங்குகின்றன. எனவே இந்த திட்டங்களில் உள்ள நன்மைகள் என்ன என்பதை விரிவாக அறிந்து கொள்வோம்.

ரூ .693 மற்றும் ரூ .1,212 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள்:
பிஎஸ்என்எல் (BSNL) இந்த இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் புதிய ரூ .693 திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் 300 ஜிபி தரவைப் பெறுகிறார்கள். 

ரூ .1,212 திட்டத்தில் 365 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 500 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அதில் கிடைக்கும் தரவு தினசரி வரம்பில்லாமல் கிடைக்கும். இருப்பினும், இந்த திட்டங்களில் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் சலுகைகள் கிடையது. 

பி.எஸ்.என்.எல் இன் பிற பிரபலமான எஸ்.டி.வி. (STV) திட்டத்தை பற்றி பேசினால், அது ரூ 551 க்கு கிடைக்கிறது. 90 நாட்கள் செல்லுபடியாகும். இந்த சிறப்பு கட்டண வவுச்சரில், தினசரி 5 ஜிபி படி மொத்தம் 450 ஜிபி தரவு வழங்கப்படுகிறது.

குறைக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் தரவு:
பிஎஸ்என்எல் சமீபத்தில் அதன் திட்டங்களில் காணப்படும் தரவு மற்றும் செல்லுபடியாகும் காலத்தை குறைத்துள்ளது. BSNL நிறுவனத்தின் பிரபலமான ஒரு ஆண்டு திட்டமான ரூ .1,699 இப்போது 365 நாட்களுக்கு பதிலாக 300 நாட்கள் செல்லுபடியாகும். இதனுடன், நிறுவனத்தின்  தினசரி திட்டம் ரூ .186 மற்றும் ரூ .187 பேக்குகளில் வழங்கப்பட்ட 3 ஜிபி டேட்டாவை 2 ஜிபி டேட்டாவாக குறைத்துள்ளது.

கோவிட் -19 காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை அடுத்து பயனர்கள் வீட்டிலேயே இருக்க ஊக்குவிக்கும் முயற்சியில், பிஎஸ்என்எல் நெட்வொர்க் ஆபரேட்டர் பெயரை "BSNL Stay at Home" என்று மாற்றியுள்ளது.

Trending News