தினமும் 5 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.599 ‘வொர்க் ஃபிரம் ஹோம்’ திட்டத்தை வெளியிட்டுள்ளது பிஎஸ்என்எல்..!
BSNL நிறுவனம் தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் ‘Work@Home’ திட்டமான ரூ.599 பிளானில் நாள் ஒன்றுக்கு 5 GB டேட்டா உடன் 90 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இந்த பிளான் BSNL வட்டத்தை தவிர மீதமுள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கும் வகையில் பிஎஸ்என்எஸ் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் 3G சேவையை மட்டும் வழங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓதனை முறையில் 4G நெட்வொர்க்கினை BSNL சோதனை செய்து வருகின்றது.
READ | Zoom, Google Meet-க்கு போட்டியாக களமிறங்கும் 'JioMeet'.... சிறப்பு அம்சம் என்ன?
BSNL ரூ.599 பிளான் சிறப்புகள் என்ன?
புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பிஎஸ்என்எல் ரூபாய் 599 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக உயர் வேக டேட்டா 5 ஜிபி, 250 நிமிட அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் பெறலாம். தினசரி பயன்பாடு 5GB டேட்டாவை கடந்த பிறகு 80 Kbps வேகத்தில் தொடர்ந்து இணையத்தை அனுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலிடிட்டி – 90 நாட்கள்
டேட்டா – நாள் ஒன்றுக்கு 5 GB
SMS - 100
அழைப்புகள் – அனைத்து நெட்வொர்க்கிற்கும் 250 நிமிடங்கள் இலவசம்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுவாக இந்த கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3GB அல்லது 4GB டேட்டா வரை மட்டுமே வழங்கி வருகின்றது.