பிளிப்கார்ட் விற்பனை: இந்தியாவில் இந்த ஆண்டு 5ஜி சேவை தொடங்கவுள்ளது. இதன் காரணமாக 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் எண்ணம் கொண்டவர்கள், 5ஜி போன்களையே வாங்க முன்வருகிறார்கள்.
அனைத்து முக்கிய மொபைல் நிறுவனங்களும் தங்கள் சொந்த 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. 4ஜியுடன் ஒப்பிடும்போது 5ஜி போன்களின் விலை அதிகம். எனினும், பல இ-காமர்ஸ் இணையதளங்கள் பல வித சலுகைகளின் மூலம் இந்த 5ஜி ஸ்மார்ட்போன்களை மிக மலிவாக விற்பனை செய்கின்றன.
சியோமி நிறுவனம் சமீபத்தில் சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 30 ஆயிரம் ரூபாய் பிளிப்கார்டில் 10ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வாங்கலாம். எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
சியோமி 11ஐ 5ஜி: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
சியோமி 11ஐ 5ஜி 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் தொடக்க விலை ரூ.29,999 ஆகும். எனினும், இந்த போன் பிளிப்கார்டில் ரூ.24,999க்கு கிடைக்கிறது. அதாவது, போனில் ரூ.5 ஆயிரம் முழுத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதைத் தவிர இந்த போனுக்கு பல வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக போனின் விலை கணிசமாகக் குறையும்.
மேலும் படிக்க | பிளிப்கார்ட் விற்பனை! 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை 150 ரூபாய்க்கு வாங்கலாம்
சியோமி 11ஐ 5ஜி: வங்கி சலுகை
சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடியாக ரூ.2 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். இது தவிர போனுக்கு ரூ.500 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக போனின் விலை ரூ.22,499 ஆக இருக்கும்.
சியோமி 11ஐ 5ஜி: எக்ஸ்சேஞ்ச் சலுகை
சியோமி 11ஐ 5ஜி-யில் ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், அதாவது பரிமாற்ற சலுகை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால்,
இந்த தள்ளுபடியை பெறலாம்.
ஆனால் இதற்கு பழைய போன் நல்ல நிலையில் இருப்பதையும் லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் உறுதி செய்ய வெண்டும். அப்படி இருந்தால் மட்டும் தான் 13 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அனைத்து சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் முழுமையாக பெற முடிந்தால், தொலைபேசியின் விலை ரூ.9,499 ஆக இருக்கும்.
மேலும் படிக்க | பம்பர் தள்ளுபடியில் கிடைக்கும் ரெட்மியின் அசத்தல் ஸ்மார்ட்போன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR