இன்வெர்ட்டர் இல்லையா... கரண்ட் கட்டால் அதிகம் சிரமப்படுகிறீர்களா? - இதோ அசத்தல் தீர்வு!

Powercut Solution: இன்வெர்ட்டர் இல்லாத வீடுகளில் மின்சார தடைப்பட்டால் பலரும் தங்களின் வேலைகளை செய்ய சிரமப்படும் நிலையில், ஒரு சிறப்பான தீர்வை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 15, 2023, 03:01 PM IST
  • இந்த பிரச்னையை எல்இடி பல்பு மூலமே தீர்க்கலாம்.
  • இதனை நீங்கள் ஆன்லைனிலேயே வாங்கலாம்.
  • மேலும், இதனை நீங்கள் சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இன்வெர்ட்டர் இல்லையா... கரண்ட் கட்டால் அதிகம் சிரமப்படுகிறீர்களா? - இதோ அசத்தல் தீர்வு! title=

Rechargable LED Bulb: தமிழ்நாட்டில் என்றில்லை நாடு முழுவதுமே மின்வெட்டு என்பது மிகப் பெரிய பிரச்னைதான். திட்டமிடப்பட்ட மின்வெட்டு, திட்டமிடப்படாத மின்வெட்டு என இரண்டு உள்ளன. தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு என்பது வழக்கத்தில் இல்லை. அந்த வகையில், இயற்கை சீற்றங்களான மழை, வெள்ளம், சூறாவளி காற்று போன்றவற்றால் ஏற்படும் சேதங்களாலும் நீண்ட நெடிய மின்வெட்டு நிகழும். அதேபோல், பராமரிப்பு காரணங்களுக்காக மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ பகலில் மின்சாரம் தடைபடும்.

இருட்டில் சிரமப்படுகிறீர்களா...?

அந்த வேளைகளில் அதற்கான மாற்று ஏற்பாடுகளை மக்கள் ஏற்படுத்திக்கொள்கின்றனர். குறிப்பாக, வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்கள் செய்பவர்கள் மின்தடை ஏற்பட்டாலும் வேலை கெடாமல் இருக்க இன்வெர்ட்டர் அதிகம் நாடுகின்றனர். அந்த நிலையில், தற்போதைய காலகட்டத்தில் இன்வெர்ட்டர் இல்லாத வீடுகளை காண்பதே அரிதாகிவிட்டது எனலாம். இருப்பினும், இன்னும் பல சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டில் இன்வெர்டர் இருப்பதில்லை. ஒருவேளை இரவு பொழுதில் மின்சாரம் தடைப்பட்டுவிட்டால் அவர்கள் இருட்டில் சிமரப்படுகின்றனர்.  

அந்த பிரச்னைக்கு தீர்வாக எல்இடி பல்புகள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரண எல்இடி பல்புகள் மின்சாரம் இருக்கும் வரை மட்டுமே வேலை செய்யும். மின்சாரம் தடைபட்டால் அவை வேலை செய்யாது. ஆனால், தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் பல மணி நேரம் எரியும் பல்புகளும் விற்பனையில் உள்ளன. இந்த பல்புகள் எந்த தொழில்நுட்பத்தில் வேலை செய்கின்றன, அவற்றின் பெயர், அவற்றின் விலை ஆகியவை குறித்து தெரியாதவர்கள் இங்கு தெரிந்துகொள்ளலாம். இதனை உங்கள் வீட்டில் பயன்படுத்தி மின்வெட்டு காலங்களில் இருட்டில் சிமரமின்றி தப்பிக்கலாம். 

மேலும் படிக்க | அமேசான் விற்பனை 2023: நம்ப முடியாத ஆஃபர்..! சரிபாதி தள்ளுபடியில் லெனோவா டேப்லெட்கள்

விலை என்ன தெரியுமா?

மேலே குறிப்பிட்ட பல்பின் பெயர் ரிச்சார்ஜபிள் எமர்ஜென்சி எல்இடி பல்ப் ஆகும். நீங்கள் அதை ஆன்லைனில் வாங்கலாம். இதன் விலையைப் பார்த்தால், வாடிக்கையாளர்கள் 400-600 ரூபாய்க்கு அதனை வாங்கிக்கொள்ள முடியும். சாதாரண எல்இடி விளக்கை ஒப்பிடும்போது, அதன் விலை கிட்டத்தட்ட இருமடங்காகும் என்பதை நினைவில் கொள்ளவும். 

ஆனால் இது இருந்தபோதிலும், இது சாதாரண எல்இடி விளக்கை விட மிகவும் சிறந்தது மற்றும் மணிநேரங்களுக்கு உங்களுக்கு விளக்குகளை வழங்க முடியும். இந்த எல்இடி பல்புகள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு சுமார் 4 மணி நேரம் எரிந்து கொண்டே இருக்கும். அவசர காலங்களில் அவற்றைப் பயன்படுத்தலாம். தனித்தனியாக நீங்கள் செலவு செய்ய தேவையில்லை. சொந்தமாக சார்ஜ் செய்துகொள்வது சிறப்பு.

மற்ற அம்சங்கள்

அந்த பல்பின் மற்ற அம்சங்களைப் பற்றி பார்த்தால், இந்த பல்ப் மின்வெட்டின் போது 4 மணிநேரத்திற்கு தொடர்ச்சியான எரியும். இது சக்திவாய்ந்த லித்தியம்-அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது சார்ஜ் செய்ய 8-10 மணிநேரம் ஆகும். இந்த 12W இன்வெர்ட்டர் எமர்ஜென்சி எல்இடி பல்பை ஆன் செய்யும் போது தானாகவே சார்ஜ் செய்யும். இது உங்கள் படிப்புக்கும் அறை மற்றும் வீட்டில் குளியலறையில் பயன்படுத்திக்கொள்ளலாம் சில்லறை கடைகள் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படலாம். இதில் உங்களுக்கு 6 மாத வாரண்டி கிடைக்கும்.

மேலும் படிக்க | கொஞ்சம் இதையும் தெரிஞ்சுக்கோங்க பாஸ்..! தரமான கேமராவுடன் 20 ஆயிரத்தில் உள்ள ஸ்மார்ட்போன்கள்
 

Trending News