iPhone 15 Pro Overheating: ஆப்பிள் தனது ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதில் ஐபோன் 15, ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என மூன்று வேரியண்ட்கள் உள்ளன. இதில், 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் அதிக வெப்பமடைவதாக புகார்கள் எழுந்துள்ளன.
iOS 17.0.3 அப்டேட் வந்த பிறகும், பயனர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது நடந்த ஒரு சம்பவம் சாதனத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை வாடிக்கையாளர்களிடம் எழுப்பியுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த விமர்சகர்கள் சிலர் ஹார்ட்வேரில் சில சிக்கல்கள் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றவர்கள் இது மென்பொருள் தொடர்பானது என்றும் கூறுகின்றனர்.
பெரும்பாலான சிக்கல்கள் மென்பொருள் தொடர்பானவை என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஸ்மார்ட்போன் வெப்பமடைவதை தடுக்க அப்டேட்டை கொண்டு வந்திருப்பதாகவும் ஆப்பிள் தெரிவித்தது. iOS 17.0.3 அப்டேட்டால் கூட அதிக வெப்பமடைவதால் ஏற்படும் பிரச்சனையை குறைக்க முடியவில்லை. இது ஒரு புறம் இருக்க, தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் இந்த ஸ்மார்ட்போனால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் வருகின்றன.
மேலும் படிக்க | Flipkart Big Diwali Sale: பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.4,999 க்கு ஐபோன் விற்பனை!
ஒரே இரவில் உருகிய ஸ்கிரீன்
ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ வைத்துள்ள ஒரு Reddit பயனர் தனது மோசமான அனுபவத்தை பகிர்ந்தார். அதில், அவர் இரவில் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், பிளாஸ்டிக் எரியும் வாசனையால் எழுந்துள்ளார் என்றும் அப்போது அவர் தனது ஐபோன் 15 ப்ரோவை பார்த்தபோது முழுவதுமாக அது உருகியிருந்ததை பார்த்தார் என்றும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Woke up to a smell of burning plastic this morning. Turns out my iPhone 15 Pro melted overnight…
byu/Trulywenttospace iniphone
மேலும், அது முற்றிலுமாக உருகியிருப்பதை உறுதிசெய்துள்ளார். அவர் மொபைலின் பேட்டரி மிகவும் சூடாகியுள்ளது, அது பிளாஸ்டிக் பின் பேனலை உருக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அந்த மொபைலில் ஸ்கிரீன் ப்ரொடெக்டர் இல்லை என்பதை பயனர் உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் ஐபோன் 15 ப்ரோ அதிக வெப்பத்திற்கு ஆளாகக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். இதனால் பல்வேறு பயனர்கள் கவலைக்குள்ளாகி உள்ளனர்.
அந்த Reddit பயனர் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் படத்தையும் பகிர்ந்திருந்தார். அதில் அவரது ஐபோன் 15 ப்ரோ முற்றிலும் உருகியதை காண முடிகிறது. புகைப்படத்தில், மொபைலின் முன் கேமராவும் டைனமிக் ஐலேண்ட் பகுதியும் ஒன்றாக இணைந்திருப்பதை படத்தில் காண முடிந்தது. மேலும் டிஸ்ப்ளே முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் ஐபோன் 15 ப்ரோவின் குளிரூட்டும் அல்லது வெப்ப மேலாண்மை அமைப்பில் சாத்தியமான சிக்கல்களை பரிந்துரைக்கிறது.
பயனர் உடனடியாக அருகிலுள்ள ஆப்பிள் ஸ்டோருக்குச் சென்று, அவரது சேதமடைந்த சாதனத்திற்கு இலவச மாற்றீட்டைப் பெற்றார். ஆப்பிள் ஊழியர்கள் அந்த மொபைலின் நிலை குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர் மற்றும் தாங்கள் இதற்கு முன்பு இப்படி பார்த்ததில்லை என்று கூறி உள்ளனர்.
ஐபோன் 15 சீரிஸ் அறிமுகமானதில் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக, சிலரின் மொபைல்கள் தானாகவே ஆஃப் ஆகி, இரவில் ரீஸ்டார் ஆவதாக கூறப்பட்டது. இதுபோன்ற பல்வேறு புகார்களுக்கும் ஆப்பிள் நிறுவனம் தீர்வை வழங்கி வருவதாக தெரிவித்தது.
மேலும் படிக்க | உங்கள் ஐபோனை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி...? சில டிப்ஸ் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ