அதிர்ச்சி! இனி அமேசானில் பொருட்களை வாங்க அதிக செலவாகும்.. 'கார்ட்'-ல இருந்தா சட்டுபுட்டுனு வாங்கிடுங்க

Amazon: ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசான், அதன் விற்பனையாளர் கட்டணம் மற்றும் கமிஷன் கட்டணங்களை மாற்ற உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 21, 2023, 06:24 PM IST
  • அமேசான் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி.
  • இனி அமேசானில் பொருட்களை வாங்க அதிக செலவாகும்.
  • அதற்கான காரணத்தை இங்கே காணலாம்.
அதிர்ச்சி! இனி அமேசானில் பொருட்களை வாங்க அதிக செலவாகும்.. 'கார்ட்'-ல இருந்தா சட்டுபுட்டுனு வாங்கிடுங்க title=

Amazon Shopping to be Expensive: இ-காமர்ஸ் இணையதளமான அமேசானில் நாம் பல வித பொருட்களை வாங்குகிறோம். சில சமயம் நமக்கு பிடித்தமான பொருட்களை பார்த்து, அவற்றை பின்னர் வாங்க 'கார்ட்' -டில் போட்டு வைக்கிறோம். நீங்களும் அப்படி சில பொருட்களை கார்ட்டில் வைத்திருந்தால், அவற்றை உடனடியாக வாங்கிவிடுவது நல்லது. ஏனெனில் மே 31க்குப் பிறகு, இந்த தளத்திலிருந்து பொருட்களை ஆர்டர் செய்வதற்கு முன்பை விட அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும். ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசான், அதன் விற்பனையாளர் கட்டணம் மற்றும் கமிஷன் கட்டணங்களை மாற்ற உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் பிறகு, பொருட்களின் விலைகள் முன்பை விட அதிகமாகும். ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் கமிஷன் மூலம்தான் பணம் ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விற்பனையாளர்கள் இந்த தளத்தின் மூலம் பொருட்களை விற்கிறார்கள், அதற்கு பதிலாக நிறுவனம் பணத்தை வசூலிக்கிறது.

நிறுவனம் தனது வருடாந்திர செயல்முறையின் கீழ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மே 31 க்குப் பிறகு, புதிய விதிகள் இந்த தளத்தில் செயல்படுத்தப்படும். இதன் விளைவாக பொருட்களின் விலை முன்பை விட அதிகமாகும். ஆடைகள், அழகு சாதனங்கள், மருந்துகள், மளிகை பொருட்கள் போன்ற பிரிவுகளில் விற்பனையாளர் கட்டணத்தை நிறுவனம் உயர்த்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறிவரும் சந்தை சூழல் மற்றும் மேக்ரோ பொருளாதார காரணங்களால் விற்பனையாளர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சதவிகிதத்தில் மாற்றம் இருக்கும்

மருந்துப் பிரிவில் விற்பனையாளர் கட்டணம் (செல்லர் ஃபீஸ்) 500 ரூபாய் வரையிலான பொருட்களுக்கு 5.5 முதல் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 500 ரூபாய்க்கு மேல் உள்ள பொருட்களுக்கான கட்டணம் 15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆடைகளில், 1,000க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு, 19ல் இருந்து, 22.5 சதவீதமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அழகு சாதனப் பொருட்களுக்கான கமிஷன் 8.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர உள்நாட்டில் பரிமாற்றப்படும் பொருட்களுக்கான டெலிவரி கட்டணத்தை 20 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

மேலும் படிக்க | Jio Vs Amazon Vs Netflix vs Disney Hotstar: மலிவான, மிகச்சிறந்த ஓடிடி தளம் எது? 

நிறுவனம் 500 -க்கும் மேற்பட்டவர்களை பணி நீக்கம் செய்தது

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், சமீபத்தில் 500 -க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனத்தில் ஆட்குறைப்பு செயல்முறை நடந்து வருகிறது. மேலும் அமேசான் வெப் சர்வீசஸ், ஹெச்ஆர் மற்றும் உதவி ஊழியர்களில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படுகிறார்கள். 9000 பனியிடங்களுக்கான ஆட்குறைப்பு செயல்முறை குறித்து மார்ச் 2023 இல் நிறுவனம் அறிவித்தது. சமீபத்திய ஆட்குறைப்பு அதில் ஒன்றாகும். மார்ச் மாதத்தில், நிறுவனம் அதன் கிளவுட் சேவைகள், விளம்பரம் மற்றும் ட்விச் யூனிட்களில் இருந்து சுமார் 9,000 வேலைகளை குறைக்கப் போவதாக அறிவித்தது. 18,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி ஊழியர்களுக்கு ஒரு மெமோவில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

கூடுதல் தகவல்:

அமேசானில் Samsung Galaxy S22 5G -க்கு கிடைக்கும் சலுகைகள்:

Samsung Galaxy S22 5G இல் கிடைக்கும் சலுகையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன், அதன் விலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை 91,999 ரூபாய் ஆகும். எனினும், வாடிக்கையாளர்கள் இதை வெறும் 50,499 ரூபாய்க்கு அமேசானில் வாங்க முடியும். ஏனெனில் இதில் 45 சதவிகிதம் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பெரிய தள்ளுபடிக்குப் பிறகு, வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும், ஏனெனில் சிறந்த அம்சங்கள் மற்றும் வடிவமைப்புடன் கூடிய இந்த சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை அவர்கள் மிகக்குறைந்த விலையில் தற்போது வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் மிகப்பெரிய பெரிய தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும். 

மேலும் படிக்க | AI தொழில்நுட்பத்தை தடை செய்யும் இந்திய அரசு! விரைவில் வருகிறது புதிய விதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News