ஆன்லைன் ஷாப்பிங்கில் நடைபெறும் பித்தலாட்டம்! உஷாராகவில்லையென்றால் பணம் காலி

Shopping Fraud: ஆன்லைன் ஷாப்பிங்கில் மக்கள் எப்படி எல்லாம் ஏமாற்றபடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 1, 2022, 06:47 PM IST
ஆன்லைன் ஷாப்பிங்கில் நடைபெறும் பித்தலாட்டம்! உஷாராகவில்லையென்றால் பணம் காலி title=

Online Fraud: உங்களில் பெரும்பாலோர் நிச்சயமாக ஆன்லைன் ஷாப்பிங்கை செய்திருப்பீர்கள். ஏனெனில் பொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் ஷாப்பிங். இன்னொன்று, மிகவும் குறைந்தவிலையில் விட நல்ல தரமான பொருட்களை வாங்கிவிடலாம். அதேநேரத்தில் இதில் ஆபத்தும் உள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் பலரிடம் மோசடி கும்பல் தங்களின் சித்துவிளையாட்டுகளை அரங்கேற்றியுள்ளனர். அதாவது, ஆர்டர் செய்யும் பொருள் ஒன்று என்றால், அதனை டெலிவரி செய்வது வேறொரு பொருளாகவும் இருக்கிறது. 

ஏதொ ஓரிரு இடத்தில் நடந்திருந்தால் தவறு என புரிந்து கொள்ளலாம். சுமார் நூற்றுக்கணக்கானோரிடம் இத்தகைய மோசடி அரங்கேறியுள்ளது. இதற்கு பின்னால் மோசடி கும்பலின் தந்திரம் இருக்கிறது. அது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | Flipkart Black Friday Sale: இந்த அட்டகாசமான போனை இலவசமாக வாங்கலாம்

வாடிக்கையாளர்கள் ஏமாறுவது எப்படி?

வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும்போது, ​​தயாரிப்பைத் தேர்ந்தெடுத்த பிறகு நேரடியாகப் பணம் செலுத்தி, தயாரிப்பு டெலிவரி செய்யப்படும் வரை காத்திருக்கிறார்கள். இந்த வழியில் ஷாப்பிங் செய்வது உங்கள் தயாரிப்பைப் பாதுகாப்பற்றதாக ஆக்குகிறது. அதனால் நீங்கள் எப்போதும், ஓபன் பாக்ஸ் டெலிவரி ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பொருட்களை டெலிவரி பாய் உங்களுக்கு திறந்து காட்டுவதற்கு அனுமதி உள்ளது. ஒருவேளை நீங்கள் ஓபன் பாக்ஸ் டெலிவரி ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை ஷாப்பிங் எக்ஸிகியூட்டிவ் அந்த பாக்ஸை ஓபன் செய்ய முடியாது.

வாடிக்கையாளர் என்ன செய்ய வேண்டும்?

ஓபன் பாக்ஸ் டெலிவரி ஆப்சனில் நீங்கள் பொருளை டெலிவரி எக்ஸிகியூடிவ் திறந்து காட்டி சமாதானம் அடைந்தால் மட்டுமே பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால் திருப்பி அனுப்பிவிடலாம். உள்ளூர் விற்பனையாளரின் உதவியுடன் நிறுவனம் தயாரிப்புகளை டெலிவரி செய்யும் போது, ​​அதிகபட்ச மோசடி உள்ளது. ஓபன் பாக்ஸ் டெலிவரி இல்லாத ஆர்டர்கள் இல்லையென்றால், டெலிவரி செய்பவர்கள் அசல் பொருளை மாற்றி வேறொரு பொருளை வைத்து உங்களுக்கு போலியான பொருட்களை வழங்குகின்றனர். இதனால் வாடிக்கையாளர்களாகிய நீங்கள் சிரமத்துக்குள்ளாக வேண்டியிருக்கும். எப்போது ஆர்டர் செய்தாலும் ஓபன் பாக்ஸ் டெலிவரி ஆப்சனை தேர்ந்தெடுக்க மறவாதீர்கள்.

மேலும் படிக்க | மக்களே ரெடியா! பட்ஜெட் விலையில் விவோ களமிறக்கப்போகும் 5G ஸ்மார்ட்போன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News