பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும்! ஊழியர்களுக்கு உத்தரவு!

ஆப்பிள் அதன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை கோவிட்-19 தொற்றுக்கான பூஸ்டர் தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க கோரியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 16, 2022, 06:02 PM IST
  • ஆப்பிள் நிறுவனம் ஊழியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
  • பிப்ரவரி-15ம் தேதியிலிருந்து அந்தந்த கடைகளில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும்! ஊழியர்களுக்கு உத்தரவு! title=

அதிகரித்து வரும் நோய்பரவல் காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.  அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் அதன் நேரடி மற்றும் கிளை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  அதாவது கோவிட் 19 தொற்றுக்கான பூஸ்டர் தடுப்பூசி பெற தகுதியான நபர்கள் 4 வாரங்களுக்குள் தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும்.

ALSO READ | Immunity Booster Foods: கொரோனாவில் இருந்து உங்களை காக்கும் Immunity உணவுகள்

மேலும் பிப்ரவரி-15ம் தேதியிலிருந்து ஊழியர்களுக்கு அந்தந்த கடைகளில் அடிக்கடி கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும்.  மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அல்லது தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை நிறுவனத்தில் சமர்பிக்கத்தவர்கள் கோவிட்-19 இல்லை என்பதற்கான சான்றிதழை வரும் ஜனவரி-24ம் தேதி முதல் சமர்ப்பிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம்  கூறியுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி குறித்து ஆப்பிள் நிறுவனம் கூறுகையில், இந்த நோய் பரவல் சூழலில் கொரோனாவிற்காக ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தற்போது பரவி வரும் ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் அளவிற்கு வலிமை இல்லாதவை, தற்போது போடப்படும் பூஸ்டர் தடுப்பூசிகள் அதனை எதிர்த்து போராடும் வகையில் உள்ளது என்று கூறியுள்ளது.  கடந்த ஆண்டில் இந்நிறுவனம் அதன் ஊழியர்களை நிறுவனத்திற்கும் அனுமதிக்கும் முன்னர் அவர்களுக்கு தினமும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்த பின்னரே அவர்களை அனுமதித்து வந்தது.  மேலும் மெட்டா(Meta) நிறுவனம் அதன் ஊழியர்களை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உத்தரவு விதித்துள்ளது.  ஆனால் கூகிள்(Google) பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நிர்பந்திக்கவில்லை, முதல் இரண்டு டோஸ்களையும் செலுத்த அறிவுறுத்தியுள்ளதோடு, வாரம் ஒரு முறை பரிசோதனை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.

ALSO READ | Omicron அறிகுறி இருந்தால் இவற்றை உட்கொள்ளுங்கள்: அதிக பலன் கிடைக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News