Amazon, Flipkart சலுகை விற்பனையில் 80-85% தள்ளுபடி எப்படி சாத்தியமாகிறது!

Flipkart, Amazon போன்ற நிறுவனங்கள் பண்டிகைக் காலங்களில் 80 முதல் 85 சதவீதம் வரை தள்ளுபடி தருகின்றன, ஆனால் இது எப்படி சாத்தியம் என்பதை இன்று புரிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 24, 2022, 01:48 PM IST
  • தொலைக்காட்சிகள் மற்றும் உபகரணங்களுக்கு 80% வரை தள்ளுபடியும் உண்டு.
  • ஃபேஷன், அழகு, பொம்மை, விளையாட்டு மற்றும் பிற பொருட்களுக்கு 60%-80% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • அமேசானும் 2,000க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை இந்த முறை கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சலுகையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Amazon, Flipkart  சலுகை விற்பனையில் 80-85% தள்ளுபடி எப்படி சாத்தியமாகிறது! title=

ஆன்லைன் ஷாப்பிங்கில்,  இந்தியாவில் முக்கியமாக இரண்டு தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்..  இரண்டுமே இந்திய இ-காமர்ஸ் துறையின் ஜாம்பவான்களாக கருதப்படுகின்றன. இவை இரண்டும் தற்போது பெரும் தள்ளுபடி சலுகை விற்பனைகளை வருகின்றன. அமேசானில், இந்த விற்பனை கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் தரப்படுகிறது. அதே நேரத்தில் பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை என்னும் சலுகை விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான் பொருட்களுக்கு தள்ளுபடிகள் அள்ளி வழங்கப்படுகின்றன.பிளிப்கார்ட் மற்றும் அமேசான் சலுகை விற்பனை செப்டம்பர் 23 இரவு 12 மணி முதல் தொடங்கியது. இதில் ஸ்மார்ட்போன்கள் முதல் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், கேஜெட்டுகள் வரை பலதரப்பட்ட தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வழக்கம் போல், பிரைம் உறுப்பினர்களுக்கான விற்பனை ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியது. அதாவது 22 ஆம் தேதி முதலே, சலுகை விலைகளில், உறுப்பினர்கள் வாங்கலாம்.

Flipkart நிறுவனத்தின் சலுகை  விற்பனைகள்

Flipkart பற்றி  பேசுகையில், நிறுவனம் தனது விற்பனையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ் மீது 80% வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. தொலைக்காட்சிகள் மற்றும் உபகரணங்களுக்கு 80% வரை தள்ளுபடியும் உண்டு. இது தவிர, ஃபேஷன், அழகு, பொம்மை, விளையாட்டு மற்றும் பிற பொருட்களுக்கு 60%-80% தள்ளுபடி வழங்கப்படுகிறது. Flipkart-ல் உணவு மற்றும் பானங்கள் மற்றும் கிச்சன்-டைனிங்கில் 85% வரை தள்ளுபடி சலுகை கிடைக்கிறது. அதே நேரத்தில், கதவு மெத்தைகளுக்கு 85% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

அமேசானில் வழங்கப்படும் சலுகைகள் 

ஃபிளிப்கார்ட்டைப் போலவே, அமேசானும் 2,000க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை இந்த முறை கிரேட் இந்தியன் விழாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷாப்பிங் திருவிழாவின் போது அமேசான் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ் மீது 75% வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை தள்ளுபடியும், டிவி மற்றும் சாதனங்களுக்கு 70% வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், ஃபேஷன், வீடு, சமையலறை மற்றும் பிற பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி கிடைக்கிறது.

மேலும் படிக்க | Flipkart vs Amazon: தொடங்கிவிட்டது அசத்தல் விற்பனை, iPhone 14 வாங்க சிறந்த இடம் எது

சலுகை விற்பனை சாத்தியமாவது எப்படி!

இந்த நிறுவனங்கள் தங்கள் தளத்தின் மூலம் விற்பனையாளர்களையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் இடைத்தரகர்கள் போன்றவை. இந்த நிறுவனங்கள் விற்பனையாளர்கள் தங்கள் வலைத்தளத்தின் மூலம் பொருட்களை விற்க ஒரு தளத்தை வழங்குகின்றன அதற்கு பதிலாக விற்பனையில் கமிஷன் பெறுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு நிறுவனத்தின் விற்பனையின் நோக்கமும் விற்பனை அளவை அதிகரிப்பதாகும். அத்தகைய சூழ்நிலையில், விற்பனை அளவு அதிகரிப்பது வாடிக்கையாளர் தளத்தையும் அதிகரிக்கிறது. அதேபோல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பெரும் தள்ளுபடியை வழங்குகின்றன. அதே முக்கியமான விஷயம் என்னவென்றால், விற்பனையில், விற்பனைக்கான இணையதளம் மற்றும் விற்பனையாளர் இருவருக்கும் பங்கு உள்ளது.

விற்பனையாளர்களுக்கான பங்கு 

சலுகை விற்பனை மூல விற்பனையை அதிகரிப்பதற்காக, தளங்கள் அவற்றின் கமிஷனைக் குறைக்கின்றன. இதனால், இருப்பில் உள்ள சரக்குகளை விற்று தீர்க்க முடிகிறது. மேலும் நிறுவனத்திடமிருந்து அதிக அளவிலான சரக்குகளை  வாங்கி பின்னர் அதை ஆன்லைனில் விற்பனைக்கு வைப்பதால் இலாபம் பெருகுகிறது. இது தவிர, லாபம் = விற்பனை விலை - செலவு விலை  என்பது தான் வியாபாரத்தின் முக்கிய சூத்திரம். விலை என்பது தயாரிக்க எவ்வலவு செலவானது என்பதாகும். விற்பனை விலை என்பது தயாரிப்பு எந்த விலைக்கு விற்கப்பட்டது என்பதாகும். எந்தப் பொருளையும் அதிக அளவில் விற்றால், அதன் விலை குறைவதுடன், வருமானம் அதிகரிக்கும் அதிக விற்பனையில், இலாப சதவிகிதம் குறைவாக இருந்தாலும், அளவு அதிகரிப்பதால், வருவாய் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க | Flipkart Big Billion Days: ஸ்மார்ட்போன்களில் சரமாரி சலுகைகள், நம்ப முடியாத தள்ளுபடிகள்

எனவே, மொபைல், டிவி, லேப்டாப், ஏசி போன்ற பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்வதால் மட்டுமே இவ்வளவு பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது. இது தவிர, மொத்தமாக விற்பனை செய்யப்படுவதால், நிறுவனம் மற்றும் விற்பனையாளரின் லாபம் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நிறுவனங்கள் தரும் விற்பனை சலுகை மூலம், விலைகள் மலிவாகி, விற்பனை அதிகரிக்கும். இதனால், நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கிறது. அதனால்தான் இந்த விற்பனைக்கு அதிக வரவேற்பு உள்ளது.

மேலும் படிக்க | வெறும் ரூ.13,000க்கு 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க அரிய வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News