அமேசான் கிளியரண்ஸ் சேல்: JBL, Boat ஹெட்செட்களுக்கு 85% வரை தள்ளுபடி!

Boat, JBL, Sennheiser மற்றும் பிற பிராண்டுகளின் ப்ளூடூத் ஹெட்ஃபோன்களுக்கு 85% வரை அசத்தல் தள்ளுபடிகளை அமேசான் வழங்குகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 23, 2022, 04:50 PM IST
  • Boat Rockerz 255 pro Bluetooth வயர்லெஸ்: 67% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.1,139க்கு கிடைக்கிறது.
  • ​Sennheiser CX 150BT வயர்லெஸ் புளூடூத்: 60% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.1,990 இல் கிடைக்கிறது.
  • ​Infinity (JBL) Glide 500: 57% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.1,499க்கு கிடைக்கிறது.
அமேசான் கிளியரண்ஸ் சேல்: JBL, Boat ஹெட்செட்களுக்கு 85% வரை தள்ளுபடி! title=

நல்ல ஹெட்ஃபோன்கள் அல்லது வயர்லெஸ் இயர்பட்களை வாங்க திட்டமிட்டிருந்து விலை எப்போது குறையும் என்று காத்திருக்கிறீர்களா ? அதற்கான சரியான நேரம் வந்துவிட்டது. அமேசான் அதன் எலக்ட்ரானிக்ஸ் கிளியரன்ஸ் விற்பனையின் ஒரு பகுதியாக புளூடூத் ஹெட்ஃபோன்கள் மீது 85% வரை தள்ளுபடி வழங்குகிறது.

இதன் சிறப்பம்சமாக, Boat, JBL, Sennheiser மற்றும் பிற பிராண்டுகளின் ப்ளூடூத் ஹெட்ஃபோன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகளை அமேசான் வழங்குகிறது. அதில்  சிறந்த 7 சலுகைகளை காணலாம்.

1. Boat Rockerz 255 pro Bluetooth வயர்லெஸ்: 67% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.1,139க்கு கிடைக்கிறது.

Boat Rockerz 255 pro Bluetooth

Boat Rockerz 255 Pro ஒரு லைட்வெயிட் வடிவமைப்பைக் கொண்ட மாடல் ஆகும். இது நல்ல பாஸ் எஃபெக்ட்டுடன் HD ஒலி அனுபவத்தை வழங்குகிறது. இந்த மாடல் இன்-இயர் ஹெட்ஃபோன்கள் புளூடூத் V5.0 மற்றும் 10மிமீ டைனமிக் டிரைவர் யூனிட்டுடன் வருகின்றன. இது வியர்வை மற்றும் நீர்-எதிர்ப்புத்தன்மையைக் கொண்டதாகவும் உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணிநேரம் பிளேபேக் நேரத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது. அதேபோல் 20 நிமிட சார்ஜிங்குடன் 4 மணிநேர மியூசிக் பிளேபேக்கை வழங்குவதாக தெரிகிறது.

2. Fire-Boltt BN1400 புளூடூத் வயர்லெஸ்: 67% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.1,499 இல் கிடைக்கிறது.

Fire-Boltt BN1400
Fire-Boltt BN1400 ஆனது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 மணிநேரம் வரை இயங்கும் என உறுதியளிக்கிறது. இன்-இயர் ஹெட்ஃபோன்கள் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் வருகிறது, இது பயனர்கள் சாதனத்திலிருந்து நேரடியாக பாடல்களைக் கேட்க அனுமதிக்கிறது. இது 10 மிமீ டைனமிக் டிரைவர் யூனிட்டுடன் வருகிறது. மேலும் இதில், நாய்ஸ் ஐஸோலேஷன் தொழிற்நுட்பம் உள்ளது.

3. Boult Audio AirBass Livebuds: 84% தள்ளுபடிக்குப் பிறகு ரூ. 1,399 இல் கிடைக்கிறது.

Boult Audio AirBass Livebuds
Boult Audio AirBass LiveBuds IPX5 ரேட்டிங்குடன் வருகின்றன, நீர்-எதிர்ப்புத் திறன் கொண்டது. நாய்ஸ் ஐஸோலேஷன் செயல்பாட்டுடன் வரும் இந்த இயர்பட்ஸ், ஒருமுறை சார்ஜ் செய்தால் 18 மணிநேர மியூசிக் பிளேபேக்கை வழங்குவதாக உறுதியளிக்கிறது. சாதனம் ஒரு மோனோபாட் அம்சத்துடன் வருகிறது, இது இரு இயர்பட்களையும் தனித்தனியாகப் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கிறது.

மேலும் படிக்க | Tech Launch: முடிவுக்கு வரும் காத்திருப்பு! ஒன்பிளஸ் ரியாலிட்டி போகோவின் புதிய ஸ்மார்ட் போன்கள் 

4. ​Sennheiser CX 150BT வயர்லெஸ் புளூடூத்: 60% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.1,990 இல் கிடைக்கிறது.

​Sennheiser CX 150BT
சாதனம் மூன்று-பட்டன் ரிமோட் உடன் வருவதோடு, ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை இணைக்க அனுமதிக்கிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேர பேட்டரி பேக்கப்பை வழங்குவதாகவும், சவுண்டு ஐஸோலேஷன் செயல்பாட்டுடன் வருவதாகவும் இந்த பிராண்டு உறுதியளிக்கிறது.

5. ​Infinity (JBL) Glide 500: 57% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.1,499க்கு கிடைக்கிறது.

 ​Infinity (JBL) Glide 500

Infinity (JBL) Glide 500 Bluetooth ஹெட்ஃபோன்கள் லைட் வெயிட் மற்றும் மடிக்கக்கூடிய வடிவமைப்புடன் வருகின்றன. ஹெட்ஃபோன்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 மணிநேர பேட்டரி பேக் அப்பை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஹெட்ஃபோன்களின் இயர்கப்கள் மென்மையான குஷனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இது வாய்ஸ் அசிஸ்டன்ட் ஒருங்கிணைப்புடன் வருகிறது. 

6. Noise Tune Active Bluetooth Wireless: 40% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.1,198 இல் கிடைக்கிறது.

வயர்லெஸ் இன்-இயர் ஹெட்ஃபோன்கள் இரட்டை இணைத்தல் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. 10 மிமீ டைனமிக் டிரைவருடன் வருகிறது. இது சிறந்த பாஸை வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும், வியர்வை மற்றும் நீர்ப்புகா வடிவமைப்பு மற்றும் காந்த இயர்பட்களைக் கொண்டுள்ளது. இயர்போன்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேர பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று இந்த பிராண்டு உறுதியளிக்கிறது.

7. Boat Airdopes 391 True Wireless Earbuds: 46% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.2,699க்கு கிடைக்கிறது.

Boat Airdopes 391 True Wireless Earbuds
Qualcomm aptX சிப்செட்டைக் கொண்டுள்ளதோடு, ஒரே சார்ஜில் 4.5 மணிநேர மியூசிக் பிளேபேக்கை வழங்குவதாக உறுதியளிக்கிறது. வெறும் 5 நிமிட சார்ஜில் 1.5 மணிநேர பேக்கப்பை வழங்குவதாகக் கூறுகின்றன. இது வியர்வை மற்றும் நீர்-எதிர்ப்புத்தன்மையுடன் வருகிறது. Boat Airdopes 391 அதிவேக ஒலி அனுபவத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

மேலும் படிக்க | ஒரே சிம்கார்டில் இரண்டு எண்கள் பயன்படுத்துவது எப்படி? ஸ்மார்ட்போன் டிரிக்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News