ரூ.10,000-க்கும் குறைவாக ஸ்மார்ட்போன் சந்தையை கலக்க வருகிறது Micromax In 2C

Micromax In 2C: மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இது அற்புதமான வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 25, 2022, 03:16 PM IST
  • மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
  • Micromax In 2c இன் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்.
  • போனின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் மக்களை ஈர்த்து வருகின்றன.
ரூ.10,000-க்கும் குறைவாக ஸ்மார்ட்போன் சந்தையை கலக்க வருகிறது Micromax In 2C title=

மைக்ரோமேக்ஸ், 2022 ஆம் ஆண்டின் முதல் ஸ்மார்ட்போனாக மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஐ அறிவித்தது. மைக்ரோமேக்ஸ் இன் 2சி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள அடுத்த ஸ்மார்ட்போனாக இருக்கக்கூடும் என சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. 

மோனிகர் இப்போது கூகுள் பிளேவால் ஆதரிக்கப்படும் சாதனப் பட்டியலில் தரவுத்தளத்தில் தோன்றியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. 

டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டில் காணக்கூடியது போல, மைக்ரோமேக்ஸ் இன் 2c ஆனது கூகுள் ப்ளே ஆதரிக்கும் சாதனங்களின் பட்டியலில் மாடல் எண் E6533 உடன் வெளிவந்துள்ளது. இந்த மாதிரி எண் முன்பு இந்திய தரநிலைகள் பணியகம் (பிஐஎஸ்) மற்றும் ஜீக்பெஞ்ச் தரப்படுத்தல் தளத்தில் காணப்பட்டது.

மைக்ரோமேக்ஸ் இன் 2சியில் இவை எல்லாம் இருக்கும்

மைக்ரோமேக்ஸ் இன் 2c-இன் கீக்பெஞ்ச் லிஸ்டிங் ஜூன் 2021 இல் வெளியிடப்பட்டது. இது Unisoc T610 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 11 OS போன்ற முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியது. ஜீக்பெஞ்சின் சிங்கிள்-கோர் மற்றும் மல்டி-கோர் சோதனையில், கைபேசி முறையே 347 மற்றும் 1127 புள்ளிகளைப் பெற்றது. பெயர் மூலம் அறியப்படுவது போல, In 2c ஆனது கடந்த ஆண்டு மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போனுக்கு பதிலாக வரும். 

மேலும் படிக்க | உஷார் மக்களே! வங்கிக் கணக்கை காலி செய்யும் மோசமான செயலி

இந்தியாவில் Micromax இன் 2c: இந்தியாவில் இதன் விலை என்ன?

Micromax In 2c இன் விவரக்குறிப்புகள் பற்றி எந்த தகவலும் இல்லை. நிறுவனம் மார்ச் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம். இந்த போன் இந்தியாவில் ரூ.10,000 க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்படக்கூடும். வரும் காலத்தில், நிறுவனம் In 2c பற்றிய கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Micromax In Note 2 விவரக்குறிப்புகள்

கடந்த மாதம், மைக்ரோமேக்ஸ், மைக்ரோமேக்ஸ் நோட் 2 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதில் 6.43-இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளே, 16-மெகாபிக்சல் பிரண்ட் ஃபேசிங் கேமரா மற்றும் 48-மெகாபிக்சல் (முக்கிய) + 5-மெகாபிக்சல் (அல்ட்ராவைடு) + 2-மெகாபிக்சல் (மேக்ரோ) + 2-மெகாபிக்சல் (டெப்த்) குவாட் கேமரா யூனிட் ஆகியவை உள்ளன. ஹீலியோ ஜி95 இயங்கும் கைபேசியில் 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ், 30வாட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 OS மற்றும் சைட்-ஃபேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் ஆகியவை உள்ளன. 

மேலும் படிக்க | TikTok-ஐ மிஸ் செய்யும் பயனர்களுக்கு Facebook அளித்த பரிசு: புதிய அம்சம் அறிமுகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News