புதுடெல்லி: இன்று நாட்டில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு மொபைல் ரீசார்ஜ் திட்டங்களையும், பிராட்பேண்ட் திட்டங்களையும் வழங்குகி வருகிறது. இன்று நாம் ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றின் மலிவான பிராட்பேண்ட் திட்டங்களைப் பற்றி காண உள்ளோம். இதில் குறைந்த விலையில் பல நன்மைகள் கிடைக்கும்.
ஜியோவின் மலிவான பிராட்பேண்ட் திட்டம்
ஜியோவின் (Jio) மலிவான பிராட்பேண்ட் திட்டம், இதில் உங்களுக்கு 3.3TB அதாவது 30 நாட்களுக்கு 3,300GB டேட்டா ரூ.399க்கு அன்லிமிடெட் அழைப்பு நன்மையுடன் வழங்கப்படும். இந்த அதிவேக இணையத் திட்டத்தில் ஸ்ட்ரீமிங் நன்மைகளையும் பெறுவீர்கள். இந்த திட்டத்தில் ஜியோ கிளவுட், ஜியோ மியூசிக், ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி போன்ற அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் இலவச அணுகலைப் பெறுவீர்கள்.
ALSO READ | Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள்
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டம்
BSNL இன் இந்த மலிவான பிராட்பேண்ட் திட்டம் ரூ 449 ஆகும். இதில் உங்களுக்கு 3,300GB இணையம் வழங்கப்படுகிறது மற்றும் டேட்டா வேகம் 30Mbps ஆக இருக்கும். இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு முடிவடைந்தவுடன், நிறுவனம் இணைய வேகத்தை 2Mbps ஆகக் குறைக்கும். இதில் எந்த OTT நன்மைகளும் கிடைக்காது. ஆனால் அன்லிமிடெட் இலவச கல்லின் பலன் நிச்சயமாக வழங்கப்படும்.
ஏர்டெல் மலிவான ப்ரீபெய்ட் திட்டம்
இந்த மூன்று நிறுவனங்களின் பிராட்பேண்ட் திட்டங்களில் ஏர்டெல் (Airtel) திட்டம் மிகவும் விலை உயர்ந்தது மற்றும் இதன் விலை ரூ.499 ஆகும். 30 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில், 40Mbps வேகத்தில் இருக்கும் 30 நாட்களுக்கு வரம்பற்ற டேட்டாவைப் பெறுவீர்கள். இதனுடன், நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் இலவச வரம்பற்ற அழைப்பு வசதியும் வழங்கப்படும். இந்த திட்டத்தில், பல பிரபலமான OTT பயன்பாடுகளுக்கான சந்தாவும் உங்களுக்கு வழங்கப்படுகிறது.
எனவே இவை ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோவின் மலிவான பிராட்பேண்ட் திட்டங்களாகும், இந்த மூன்று திட்டங்களில் இரண்டு திட்டங்களில் பெரிய அளவிலான இணையம், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் OTT நன்மைகளைப் பெறுகிறீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: இந்த திட்டத்தில் ஜியோ-ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR