Realme GT 2: அட்டகாசமான ஸ்மார்ட்போனுக்கு அமேசனில் நம்ப முடியாத தள்ளுபடி

Realme GT 2 Pro: இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றல், இதில் பயனர்கள் எந்த வித வேக சிக்கலையும் சந்திக்க மாட்டீர்கள். அதே போல் சக்திவாய்ந்த பேட்டரியும் இதில் உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2023, 11:55 AM IST
  • ரியல்மீ ஜிடி 2 ப்ரோ ஒரு சக்திவாய்ந்த மற்றும் ஸ்டைலான ஸ்மார்ட்ஃபோன் ஆகும்.
  • இதில் ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமரா மற்றும் சிறந்த வடிவமைப்புடன் வருகிறது.
Realme GT 2: அட்டகாசமான ஸ்மார்ட்போனுக்கு அமேசனில் நம்ப முடியாத தள்ளுபடி title=

Realme GT 2 Pro டீல்: ரியல்மீ ஜிடி 2 ப்ரோ (Realme GT 2 Pro) ஒரு சக்திவாய்ந்த மற்றும் ஸ்டைலான ஸ்மார்ட்ஃபோன் ஆகும். இதில் ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமரா மற்றும் சிறந்த வடிவமைப்புடன் வருகிறது. மேலும் இது வேகமான மற்றும் பிரகாசமான (ஃபாஸ்ட் அண்ட் ப்ரைட்) டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் செயல்திறனும் அபாரமானது. இது நிறுவனத்தின் முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். 

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றல், இதில் பயனர்கள் எந்த வித வேக சிக்கலையும் சந்திக்க மாட்டீர்கள். அதே போல் சக்திவாய்ந்த பேட்டரியும் இதில் உள்ளது. இதன் காரணமாக பயனர்கள் இந்த போனை நீண்ட நேரம் பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் ஒரு அட்டகாசமான டீல் வழங்கப்படுகின்றது. அமேசானில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம். 

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்ன

இந்த ஸ்மார்ட்போனில், வாடிக்கையாளர்கள் 5000mAh பேட்டரியைப் பெறுகிறார்கள். இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும். மேலும் இதை மணிக்கணக்கில் பயன்படுத்தினாலும் தீர்ந்துவிடாது. இது 6.7-இன்ச் 2கெ தெளிவுத்திறன் கொண்ட LPTO திரையை 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. அதாவது இது மிகவும் மென்மையான அனுபவத்தை வழங்குகிறது மற்றும் வாடிக்கையாளர்கள் அதை இயக்கும்போது லேக் இல்லாத (லேக் ஃப்ரீ) அனுபவத்தைப் பெறுவார்கள். 

மேலும் படிக்க | பிளிப்கார்ட் மற்றும் அமேசானுக்கு ஆப்பு வைத்த அரசு இணையதளம்

Realme GT 2 Pro இல், பயனர்களுக்காக Qualcomm இன் Snapdragon 8 Gen 1 செயலி வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு முதன்மை ப்ராசசர் ஆகும். இது வாடிக்கையாளர்களுக்கு வேகமான கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் அனுபவத்தை வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் சலுகை என்ன? 

அமேசானில் இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை ரூ. 45,999 ஆகும். எனினும், வாடிக்கையாளர்கள் விரும்பினால், அதை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள் ரூ. 16,843 சேமிக்க முடியும். 

அமேசானில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ. 16,843 தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. ஆகையால் இந்த ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் அமேசானில் கிடைக்கும் இந்த நல்ல டீலை பயன்படுத்திக்கொண்டால் லாபம் காணலாம். இந்த சலுகைக்கு பிறகு, இந்த அற்புதமான ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் வெறும் ரூ. 29,156 செலுத்தினால் போதும். இது மிகவும் அற்புதமான ஒரு டீலாக உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை அதிரடி தள்ளுபடி விலையில் வாங்கலாம். 

மேலும் படிக்க | 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.12 ஆயிரம் மட்டுமே.. குறைந்த விலையில் களமிறக்கிய சாம்சங்க்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News