Jio பயனர்களுக்கு அனுப்பிய Welcome Offer: இலவசமாக Jio 5G பெறுவது எப்படி?

Jio 5G: சிறப்பு 5ஜி சலுகையின் கீழ், ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்குகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 23, 2022, 01:50 PM IST
  • ஜியோ 5ஜி பெறுவதற்கான அளவுகோல் என்ன?
  • ஜியோ 5ஜியை இலவசமாகப் பெறுவது எப்படி?
  • ஜியோ 5ஜி திட்டங்கள் எப்போது வரும்?
Jio பயனர்களுக்கு அனுப்பிய Welcome Offer: இலவசமாக Jio 5G பெறுவது எப்படி? title=

ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவையைத் தொடங்கி, படிப்படியாக பல நகரங்களைச் சென்றடைந்துகொண்டிருக்கின்றது. நிறுவனம் டெல்லி-என்சிஆர், மும்பை, கொல்கத்தா, வாரணாசி, சென்னை, பெங்களூரு, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஜியோ ட்ரூ 5ஜி என அழைக்கப்படும் 5ஜி சேவைகளை வழங்குகிறது. ஆனால் Jio 5G இன் அழைப்பிதழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வந்துள்ளது. தகுதியுடையவர்கள் 5வது ஜெனரேஷன் நெட்வொர்க் இணைப்பை இலவசமாக இணைத்து மகிழ ஜியோ ஒரு வரவேற்பு சலுகையை அறிவித்துள்ளது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வெல்கம் ஆஃபர் கிடைக்கும் என்று தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ 5ஜி பெறுவதற்கான அளவுகோல் இதுதான்:

- பயனர்கள் ஜியோ 5ஜி-நெட்வொர்க் இணக்கமான சாதனத்தை வைத்திருக்க வேண்டும்.
- ஜியோ 5ஜி-நெட்வொர்க் கவரேஜ் பகுதியில் இருக்க வேண்டும்.
- ப்ரீபெய்ட் மற்றும் அனைத்து போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் ரூ. 239 அல்லது அதற்கு மேல் செல்லுபடியாகும் ஜியோ ஆக்டிவ் பிளான் இருக்க வேண்டும்.

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் பற்றிய விவரங்கள்:

Jio 5G வெல்கம் ஆஃபர் தற்போது டெல்லி-NCR, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் பிற 5 நகரங்கள் உள்ளிட்ட தகுதியான நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. 

- சிறப்பு 5ஜி சலுகையின் கீழ், ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்குகிறது.

மேலும் படிக்க | Jio 5G: அனைத்தையும் விட சூப்பரான 5ஜி நெட்வொர்க் ஜியோதான், காரணம் என்ன? 

ஜியோ 5ஜியை இலவசமாகப் பெறுவது எப்படி?

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் அழைப்பின் அடிப்படையிலானது. மேலும் ஜியோ 5ஜி இணைப்பு பெற்ற நகரங்களில் உள்ள அனைவராலும் அழைப்பைப் பெற முடியாது. அறிக்கைகளின்படி, ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்டில் ரூ.239 அல்லது அதற்கு மேல் செயலில் உள்ள திட்டத்தைக் கொண்ட பயனர்களுக்கு ஜியோ இலவச 5ஜி சேவை அழைப்புகளை அனுப்பும்.

4ஜி சிம்மில் 5ஜி இணைப்பு கிடைக்கிறது

ஜியோ தனது பயனர்களுக்கு 5ஜி நெட்வொர்க்குடன் இணைக்க புதிய 5ஜி சிம் வாங்க வேண்டியதில்லை என்று முன்னதாக உறுதியளித்திருந்தது. தற்போதுள்ள ஜியோ 4ஜி சிம் 5ஜி இணைப்பை ஆதரிக்கும். எனவே பயனர்கள் தங்கள் ஃபோனில் ரூ.239 மற்றும் அதற்கு மேல் திட்டம் உள்ளதா என்பதை மட்டும் சரிபார்க்க வேண்டும். 

மை ஜியோ ஆப்ஸில் ஜியோ வெல்கம் ஆஃபர் அழைப்பை அனுப்பும். எனவே, நீங்கள் Jio 5G தகுதியுள்ள நகரங்களில் ஒன்றில் வசிக்கிறீர்கள் என்றால், அழைப்பைச் சரிபார்க்க MyJio பயன்பாட்டிற்குச் செல்லவும்.

ஜியோ 5ஜி திட்டங்கள் எப்போது வரும்?

ஜியோ இதுவரை 5ஜி திட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை. வரும் மாதங்களில் 5ஜி சேவை பல நகரங்களை அடைந்த பிறகு டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ 5ஜி திட்டங்களை அறிமுகப்படுத்தும். இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் ஆகி 2023க்குள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை அடைய வேண்டும் என்பதே ஜியோவின் இலக்கு. அதுவரை பயனர்கள் ஜியோ 5ஜியை இலவசமாகப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | நம்ப முடியாத விலையில் ஐபோன் 12: பிளிப்கார்டில் அதிரடி தள்ளுபடி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News