இவை அபாயமான Apps: போனில் டவுன்லோட் செய்தால் ஆபத்து, உடனே டெலீட் செய்யுங்கள்

Dangerous Smartphone Apps: கூகுள் பிளே ஸ்டோரிலும் சில ஆபத்தான, எப்போதும் பதிவிறக்கம் செய்யக்கூடாத ஆப்கள் உள்ளன. இவை பயனர்களுக்கு அதிக சிக்கல்களை உருவாக்குவதாக கூறப்பட்டுள்ளது

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2022, 01:13 PM IST
  • உடனடியாக டெலீட் செய்ய வேண்டிய ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்ஸ் இவைதான்.
  • மூன்றாம் தரப்பு செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது.
  • எப்போதும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களையே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இவை அபாயமான Apps: போனில் டவுன்லோட் செய்தால் ஆபத்து, உடனே டெலீட் செய்யுங்கள் title=

உடனடியாக டெலீட் செய்ய வேண்டிய ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்: இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைவரும் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் தங்களின் வசதி மற்றும் தேவைக்கு ஏற்ப வெவ்வேறு ஸ்மார்ட்போன் ஆப்களை தங்கள் சாதனத்தில் பதிவிறக்கம் செய்கிறார்கள். மூன்றாம் தரப்பு செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்றும், எப்போதும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களையே பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. எனினும், கூகுள் பிளே ஸ்டோரிலும் சில ஆபத்தான, எப்போதும் பதிவிறக்கம் செய்யக்கூடாத ஆப்கள் உள்ளன. 

சமீபத்திய தகவல்களின்படி, கீழே கொடுக்கப்பட்டுள்ள 35 செயலிகளிடமிருந்து (ஆப்கள்) பயனர்கள் விலகி இருக்க வேண்டியது மிக அவசியமாகும். தவறுதலாகக் கூட இவற்றை உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யக்கூடாது. 

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் ஜாக்கிரதை

சமீபத்தில், இணைய பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான Bitdefender ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தும் 35 பிரபலமான ஆண்ட்ராய்டு செயலிகளில் ஆபத்தான மால்வேர் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியது. இவை பயனர்களுக்கு அதிக சிக்கல்களை உருவாக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆப்ஸ் போனில் இருப்பது நல்லதல்ல என்றும் இவற்றை உடனே டெலீட் செய்ய வேண்டும் என்றும் எச்சரிகப்பட்டுள்லது. 

இந்த செயலிகள் உங்களை திவாலாக்கும்

கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆபத்தான பல செயலிகள் உள்ளன. இவை மிக ஆபத்தானவை என்றும் இவற்றை கண்டிப்பாக பதிவிறக்கம் செய்யக்கூடாது என்றும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் செயலிகளை மொபைலில் பதிவிறக்கம் செய்தால், பதிவிறக்கம் செய்யப்பட்ட பின்னர், இவை தங்கள் பெயர்களை மாற்றி சாதனத்தில் மறைந்திருக்கும். இந்த வழியில், தொலைபேசியில் மறைத்து, இந்த செயலிகள் பயனர்களின் விவரங்களை ஹேக்கர்களுக்கு அனுப்பும். இவற்றால் வங்கி கணக்குகளையும் அணுக முடியும்.

மேலும் படிக்க | iPhone 14 அறிமுகத்துக்கு முன் iPhone 13-ல் பம்பர் தள்ளுபடி: பிளிப்கார்ட் அதிரடி 

ஆபத்தான 35 செயலிகளின் பட்டியல் 

இந்தப் பட்டியலில் எந்தெந்த ஆப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்வது மிக அவசியமாகும். அபாயகரமான ஆப்ஸ்களின் முழு பட்டியலில் கீழ் வரும் ஆப்ஸ்களும் உள்ளன: 

Walls light - Wallpapers Pack
Big Emoji - Keyboard
Grad
Wallpapers - 3D Backdrops
Engine Wallpapers - Live & 3D
Walls light - Wallpapers Pack
Big Emoji - Keyboard
Grad
Wallpapers - 3D Backdrops
Engine Wallpapers - Live & 3D
Stock Wallpapers - 4K & HD
EffectMania - Photo Editor
Art Filter - Deep Photoeffect
Fast Emoji Keyboard
Create Sticker for Whatsapp
Math Solver - Camera Helper
Photopix Effects - Art Filter
Led Theme - Colorful Keyboard
Keyboard - Fun Emoji
Sticker
Smart Wifi
My GPS Location
Image Warp Camera
Art Girls
Wallpaper HD
Cat Simulator
Smart QR Creator
Colorize Old Photo
GPS Location Finder
Girls Art Wallpaper
Smart QR Scanner
GPS Location Maps
Volume Control
Secret Horoscope
Smart GPS Location
Animated Sticker Master
Personality Charging Show
Sleep Sounds
QR Creator
Media Volume Slider
Secret Astrology
Colorize Photos 
Phi 4K Wallpaper - Anime HD

மேலும் படிக்க | Whatsapp புதிய அம்சம்: இனி இதை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது, பாதுகாப்பு பலமானது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News