போலீசாரிடம் அபாரதம் செலுத்தவதை தவிர்க்கணுமா... கூகுள் மேப்ஸ் சொல்வதை கேளுங்கள்!

Google Maps Speed Limits: குறிப்பிட்ட சாலையில் எவ்வளவு வேகத்தில் வாகனத்தை செலுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையை கூகுள் மேப்ஸ் நிறுவனமே வழங்குகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 20, 2023, 05:58 PM IST
  • ஸ்பீடோமீட்டர் ஆப்ஷனை கூகுள் மேப்ஸ் வழங்குகிறது.
  • வேக வரம்பு ஆப்ஷன் சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளது.
  • இது போலீசார் உங்களுக்கு அபராதம் விதிப்பதில் இருந்து காக்கும்.
போலீசாரிடம் அபாரதம் செலுத்தவதை தவிர்க்கணுமா... கூகுள் மேப்ஸ் சொல்வதை கேளுங்கள்! title=

Google Maps Speed Limits: கூகுள் மேப்ஸ் பல்வேறு வசதிகளை வாகன ஓட்டிகளுக்கு வழங்கி வருகிறது. ஊர், திசை தெரியாத இடங்களிலும் கூட பலருக்கு வழிகாட்டியாக இருப்பது கூகுள் மேப்ஸ்தான். வீட்டில் இருந்து அலுவலகத்திற்கோ அல்லது வேறு எங்கோ செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்லவும் கூகுள் மேப்ஸ் உதவுகிறது. 

கூகுள் நிறுவனத்தின் இந்த அமைப்பு வாகன ஒட்டிகளுக்கு அவர்கள் செல்லும் சாலையின் வேக வரம்பையும் காட்டுகிறது. அவர்கள் அதை மீறினால் அவர்களையும் எச்சரிக்கிறது. கூகுள் மேப்ஸ் பயனர்களுக்கு அவர்கள் ஓட்டும் வேகத்தையும் காட்டுகிறது, ஆனால் காரின் ஸ்பீடோமீட்டரில் தங்கள் வேகத்தை சரிபார்க்க பயனர்களுக்கு அறிவுறுத்துகிறது. கூகுள் மேப்ஸ் முதன்முதலில் ஆன்-ஸ்கிரீன் ஸ்பீடோமீட்டரை 2019ஆம் ஆண்டு பயனர்களுக்கு வழங்கியது. அப்போது, ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு இது வழங்கப்ட்டது. 

தற்போது ஆன்-ஸ்கிரீன் ஸ்பீடோமீட்டர் அனைத்து பகுதியினருக்கும் வழங்கப்பட்டது.  கூகுள் மேப்ஸ் செயலியில் உள்ள ஸ்பீடோமீட்டர் தகவல் பயன்பாட்டிற்கு மட்டுமே ஆகும். பயனர்கள் அதை மட்டுமே நம்பக்கூடாது. வழிசெலுத்தும்போது வரைபடத்தின் கீழ் இடது மூலையில் வேக வரம்பு காட்டப்படும், மற்ற தகவல்களுடன் கணக்கிடப்பட்டே அந்த வேக வரம்பும் காட்டும்.

மேலும் படிக்க | டெக் உலகில் ட்விஸ்ட்... சாம் ஆல்ட்மேனை மைக்ரோசாப்ட் பக்கம் இழுத்த சத்யா நாதெல்லா - பின்னணி என்ன?

அதன் ஒரு பகுதியாக பயனர் இருக்கும் பகுதியின் வேக வரம்பையும் கூகுள் காட்டுகிறது. இருப்பினும், வேக வரம்பு செயல்பாடு தற்போது அனைத்து பகுதிகளிலும் இல்லை. வேக வரம்பு அம்சம் உங்கள் பகுதியில் இருந்தால், அதை எப்படி இயக்கலாம் என்பது இங்கே காணலாம். மேலும் உங்கள் வேக வரம்பை ஆன்-ஸ்கிரீன் ஸ்பீடோமீட்டரைச் சார்ந்து இருக்க வேண்டாம் என்று கூகுள் தனது பயனர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

சென்னையில் பல பகுதிகளில் சில நாள்களுக்கு முன் முக்கிய சாலைகள் மற்றும் குறுகிய சாலைகளின் வேகக்கட்டுப்பாடு மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் தற்போது கூகுள் மேப்ஸ் சாலை வேக வரம்புகளை காட்டாது என்றாலும், இந்த வசதியை தெரிந்துவைத்துக் கொள்வதன்மூலம் நீங்கள் வருங்காலத்தில் சாலைகளில் அதிவேகமாக சென்று போலீசாரிடம் அபாரதம் செலுத்தும் அந்த சிக்கலை தவிர்க்கலாம்.

கூகுள் மேப்ஸில் வேக வரம்புகளை எவ்வாறு செயல்படுத்துவது?

- கூகுள் மேப்ஸிற்கான வேக வரம்பு வரைபடத்தின் கீழ் இடது மூலையில், பயணத்தின் காலம், ETA, மீதமுள்ள கிலோமீட்டர்கள் மற்றும் வழிசெலுத்தலை மூடிவிட்டு முழு வழியையும் சொல்லும் ஆபஷனை காட்டும் தேடல் பொறி மேலே காட்டப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இதனை செயல்படுத்தும் வழிமுறைகளை இங்கு காணலாம்.

- கூகுள் மேப்ஸ் செயலியை திறக்கவும்.
- மேல் வலது மூலையில், சுயவிவரப் படம் அல்லது உங்கள் பெயரின் முதலெழுத்து காட்டப்படும் அல்லவா, அதை கிளிக் செய்யவும்.
- Settings ஆப்ஷனுக்கு செல்லவும்.
- அதில் கீழே ஸ்க்ரால் செய்து Navigation Settings வரை செல்லவும்.
- அதை ஆன் அல்லது ஆஃப் செய்ய Speed Limits அமைப்பிற்குச் செல்லவும்.
- பயனர்கள் தாங்கள் ஓட்டும் சாலையில் வேக வரம்பை மீறினால், கூகுள் மேப்ஸ் மூலம் குரல்வழியாக அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

மேலும் படிக்க | 30 நாட்களுக்கு நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ இலவசம்..! 100 ஜிபி டேட்டா கிடைக்கும்: ஜியோ பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News