பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள், குறைந்த விலையில் அதிக நன்மைகளுடன் திட்டங்களை அண்மையில் வழங்கி வருகின்றன. அதன்படி ஏர்டெல் தற்போது அதன் பயனர்களுக்காக ரூ.149 என்கிற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் இந்த புதிய திட்டத்தை ரகசியமாக கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் OTT நன்மைகளுடன் வருகிறது. ஏர்டெல் ரூ.149 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதன் வேலிடிட்டி என்ன? ஏற்கனவே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.148 திட்டத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்துக்கொள்வோம்.
ஏர்டெல் ரூ.149 டேட்டா பேக்
ஏர்டெல்லின் ரூ.149 திட்டத்தில் 1ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்திற்கென தனியாக எந்த வேலிடிட்டியும் கிடையாது. இது உங்களிடம் ஏற்கனவே இருக்கும் ஆக்டிவ் பிளானின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும். அதாவது, உங்களிடம் ஏற்கனவே 30 நாட்களுக்கு ஒரு திட்டம் இருந்தால், அதன் வேலிடிட்டியும் 30 நாட்களுக்கு இருக்கும்.
மேலும் படிக்க | Microsoft Edge யூஸ் பணறீங்களா? அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை!
1 ஜிபி டேட்டாவுடன், பயனர்கள் 30 நாட்களுக்கு எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தையும் அணுகலாம். எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் என்பது ஏர்டெல்லின் ஒரே தளமாகும், இதன் கீழ், ஒரே ஒரு ஆப் வழியாக 15 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களில் உள்ள கன்டென்ட்டை அணுக முடியும். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் வழியாக கிடைக்கும் கன்டென்ட்டை டேப்லெட், ஸ்மார்ட்போன் அல்லது டெஸ்க்டாப் வழியாக பார்க்கலாம்.
இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு நிறுவனத்தின் ஒரே நோக்கம், அதிகமான மக்கள் Xstream Premium நோக்கி நகர வேண்டும் என்பது தான்.
ஏர்டெல் ரூ.149 VS ஏர்டெல் ரூ.148
இந்த இரண்டு திட்டங்களுக்கும் பெரிய வித்தியசாம் உள்ளது. ரூ.149-ன் கீழ் உங்களுக்கு வெறும் 1ஜிபி டேட்டா கிடைக்கும். அதுவே ரூ.148 ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தமாக 15ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் ரூ.149-ன் கீழ் 30 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியமிற்கான இலவச அணுகல் கிடைக்கும். ஆனால் ரூ.148-ன் கீழ் எக்ஸ்ட்ரீம் ஆப் வழியாக ஷார்ட் டேங்க் 2-வை பார்ப்பதற்கான அணுகல் மட்டுமே கிடைக்கும்.
மேலும் படிக்க | வெயில் காலம் வந்தாச்சி!! இனி ஏசி/கூலர் ஓடும்..ஆனா பில் வரவே வராது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ