ரூ.155க்கு அசத்தல் ஆப்பரை வழங்கியுள்ள ஏர்டெல்! சிறப்பம்சங்கள் என்ன?

ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.155 முதல் ரூ.1799 வரையிலான மொத்த டேட்டா திட்டங்களை மாதாந்திரம் முதல் வருடாந்திரம் வரை செல்லுபடியாகும் வகையில் வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 14, 2023, 07:30 AM IST
  • ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு டேட்டாவுடன் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.
  • ஏர்டெல் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகின்றன.
  • ஏர்டெல் ரூ.155 முதல் ரூ.1799 வரை விலைக்கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
ரூ.155க்கு அசத்தல் ஆப்பரை வழங்கியுள்ள ஏர்டெல்! சிறப்பம்சங்கள் என்ன? title=

நாட்டின் மிக பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு ஆகியவற்றுடன் சேர்த்து பல்வேறு சலுகைகளுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது.  ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் குறிப்பிட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ஒவ்வொரு நாளும் 3 ஜிபி வரை டேட்டாவை பயனர்களுக்கு வழங்குகிறது.  எல்லா பயனர்களும் தினசரி டேட்டாவை பயன்படுத்துவதில்லை, சிலர் எங்காவது வெளியில் சென்றாலோ அல்லது வைஃபை இருக்கும் இடத்தில் இருந்தாலோ அவர்கள் டேட்டாவை பயன்படுத்தமாட்டார்கள்.  இதற்காக ஏர்டெல் பயனர்களுக்கு மொத்த டேட்டா சலுகையையும் வழங்குகிறது.  மொத்தமாக டேட்டா வழங்கப்படுவதால் தினசரி டேட்டா வரம்பு என்று எதுவுமில்லை.  ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.155 முதல் ரூ.1799 வரையிலான மொத்த டேட்டா திட்டங்களை மாதாந்திரம் முதல் வருடாந்திரம் வரை செல்லுபடியாகும் வகையில் வழங்குகிறது .

மேலும் படிக்க | இந்தியாவின் ’லித்தியம் புதையல்’ பேட்டரி துறையில் சீனாவை பின்னுக்கு தள்ளும்..! எப்படி?

ரூ.155 திட்டம்: ஏர்டெல்லின் இந்த ஆரம்ப விலையிலான திட்டமானது 24 நாட்களுக்கு 1ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது.  இதில் பயனர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு, 300 எஸ்எம்எஸ், இலவச ஹெலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றுக்கான இலவச அணுகல் வழங்கப்படுகிறது.

ரூ.179 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த ரீசார்ஜ் திட்டமானது பயனர்களுக்கு 2ஜிபி மொத்த டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, 300 எஸ்எம்எஸ், ஹெலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றின் கேஷ்பேக்கை வழங்குகிறது.

ரூ.199 திட்டம்: ஏர்டெல் வழங்கும் இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன், அன்லிமிடெட் அழைப்பு மற்றும்  300 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.  இதில் கூடுதலாக ஹெலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக்கிற்கான இலவச அணுகலுடன் 3ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது.

ரூ.296 திட்டம்: ஏர்டெல் வழங்கும் இந்த திட்டம் மொத்தமாக 25 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.  இதுதவிர அப்பல்லோ 24/7 வட்டத்தின் நன்மைகள், பாஸ்டேக், ஹெலோடியூன்ஸ் மற்றும் விங்க் ஆகியவற்றில் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரூ.455 திட்டம்:  84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டமானது பயனர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு, 900 எஸ்எம்எஸ் மற்றும் 6ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது.  இதுதவிர அப்பல்லோ 24/7 வட்டத்திற்கான இலவச அணுகல் மற்றும் பாஸ்டேக், ஹெலோடியூன்ஸ் மற்றும் விங்க் ஆகியவற்றில் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரூ.489 திட்டம்: 30 நாட்கள் திட்ட வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டமானது அன்லிமிடெட் அழைப்பு, 300 எஸ்எம்எஸ் மற்றும் அப்பல்லோ 24/7 வட்டத்தின் பலன்கள், பாஸ்டேக், ஹெலோடியூன்ஸ் மற்றும் விங்க் ஆகியவற்றில் கேஷ்பேக் உடன் 50ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது.

ரூ 509 திட்டம்: 1 மாத கால பேக் திட்டங்களில் இந்த திட்டம் சேர்த்துள்ளது. அதாவது 28 நாட்கள், 30 அல்லது 31 நாட்களாக இருந்தாலும் பயனர்கள் முழு ஒரு மாத வேலிடிட்டியைப் பெறுவார்கள்.  இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு, 300 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் 60ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது.  இதுதவிர அப்பல்லோ 24/7 வட்டத்திற்கான இலவச அணுகல் மற்றும் பாஸ்டேக், ஹெலோடியூன்ஸ் மற்றும் விங்க் ஆகியவற்றில் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரூ. 1799 திட்டம்: இந்த வருடாந்திர ரீசார்ஜ் திட்டமானது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் 24 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 3600 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  இதுதவிர இந்த திட்டத்தில் அப்பல்லோ 24/7 சர்க்கிள், பாஸ்டேக்கில் கேஷ்பேக், ஹெலோடியூன்ஸ் மற்றும் விங்க் ஆகியவை கிடைக்கிறது.

மேலும் படிக்க | Flipkart Sale: காதலர் தினத்தை ஒட்டி சாம்சங் போனில் கன்னாபின்னானு தள்ளுபடி, முந்துங்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News