ஏர்டெல் 150 ரூபாய் பட்ஜெட் ஓடிடி பிளான்! ஜியோ, வோடாஃபோன் வச்ச மெகா ஆப்பு

Airtel offers Rs 148 data plan with 20 OTT services: ஏர்டெல் நிறுவனம் 150 ரூபாய்க்குள் 20 ஓடிடிகளை இலவசமாக பார்த்து ரசிக்க அறிமுகப்படுத்தியிருக்கும் பட்ஜெட் ரீச்சார்ஜ் பிளான் ஜியோ, வோடோஃபோன் நிறுவனங்களுக்கு செம ஷாக்கை கொடுத்திருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 2, 2024, 06:26 PM IST
  • அடித்து ஆடும் ஏர்டெல்.. சூப்பரான ஓடிடி பிளான்
  • 150 ரூபாய்க்குள் 20 ஓடிடி சேவைகள் கொடுக்கிறது
  • ஜியோ, வோடாஃபோன் ஐடியாவுக்கு செம ஷாக்
ஏர்டெல் 150 ரூபாய் பட்ஜெட் ஓடிடி பிளான்! ஜியோ, வோடாஃபோன் வச்ச மெகா ஆப்பு title=

ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு இடையே யூசர்களை பிடிப்பதில் மெகா யுத்தமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால், தங்களின் ரீச்சார்ஜ் பிளான்களுடன் ஓடிடி சேவைகளையும், கவர்ச்சிகரமான கூடுதல் சலுகைகளையும் கொடுத்து யூசர்களை இழுத்து வருகின்றனர் இந்த மூன்று டெலிகாம் நிறுவனங்களும். குறிப்பாக, ஓடிடி யுகத்தில் அந்த யூசர்களை பிடிக்க மூன்று நிறுவனங்களும் கச்சிதமான பிளான்களை மார்க்கெட்டில் இறக்கியிருந்தாலும் இதில் ஒரு அடி முன்னால் இருக்கிறது ஏர்டெல். அம்பானியின் ஜியோ நிறுவனத்துக்கே ஷாக் கொடுக்கும் வகையில் 20 ஓடிடி சேவைகளை வெறும் 150 ரூபாய் விலைக்குள் கொடுக்கிறது.

ஏர்டெல்லின் ரூ.148 திட்டம்

ஏர்டெல்லின் இந்த திட்டத்தைப் பற்றி தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். 148 ரூபாய் திட்டத்தில் 15 ஜிபி டேட்டா கிடைக்கும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளேக்கு 28 நாட்களுக்கு இலவச சப்ஸ்கிரிப்சனும் கூடுதலாக கிடைக்கும். கூடுதல் சிறப்பு என்னவென்றால், Sony Liv மற்றும் Lionsgate Play உள்ளிட்ட 20 OTT செயலிகளுக்கான இலவச அணுகல் கிடைக்கும். இந்த டேட்டா திட்டத்தில் பயனர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் இலவச SMS நன்மைகளைப் பெற முடியாது. இந்த திட்டத்துக்கு போட்டியாக வோடாஃபோன் ஐடியா மற்றும் ஜியோவின் பிளான்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க | வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் தவறுகளை வீட்டில் இருந்தே சரிசெய்யலாம்!

வோடாஃபோன் ஐடியா ரூ.169 பிளான்

Vodafone-Idea (Vi) ரூ.169 திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும். மொத்தம் 8 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது OTT நன்மைகளுடன் வருகிறது. இதில் 90 நாட்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைலின் இலவச சந்தாவைப் பெறுவீர்கள். ஜியோ மற்றும் ஏர்டெல்லின் ரூ.148 டேட்டா திட்டத்துடன் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் ஏர்டெல்லுடன் ஒப்பிடும்போது குறைவான சேவைகளையே கொடுக்கிறது. அதனால் இந்த வாடிக்கையாளர்களுக்கு, ஏர்டெல்லை ஒப்பிடும்போது கொஞ்சம் ஏமாற்றம் வரலாம். 

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.148 டேட்டா திட்டம்

ஜியோவின் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் இணையத்தைப் பயன்படுத்த 10 ஜிபி அதிவேக டேட்டாவைப் பெறுவீர்கள். இந்த திட்டம் 12 OTT பயன்பாடுகளுக்கான இலவச சப்ஸ்கிரிப்சன் உள்ளது. சோனி லிவ், ஜீ5, டிஸ்கவரி பிளஸ் மற்றும் லயன்ஸ்கேட் ப்ளே ஆகியவை இதில் அடங்கும். இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு ஜியோ சினிமா பிரீமியத்திற்கும் நிறுவனம் இலவச அணுகலை வழங்குகிறது என்பது சிறப்பு. திட்டத்தில் வழங்கப்படும் டேட்டா வரம்பை தாண்டிய பிறகு, இணைய வேகம் 64Kbps ஆக குறையும். பயனர்கள் தங்கள் வழக்கமான திட்டத்துடன் இந்தத் திட்டத்தைச் கூடுதலாக சேர்க்கலாம்.

மேலும் படிக்க | ஒரே ஒரு ரீச்சார்ஜ் செய்தால் மூன்று ஓடிடி இலவசம்! 701 ரூபாய் மட்டுமே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News