புதுடெல்லி: இந்திய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சமீபத்தில் இரண்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை ஆக்டிவேட் செய்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு வசதி மற்றும் அதிவேக 4 ஜி இணைய வசதி ஆகியவை கிடைக்கும். இவற்றுடன் சுகாதார காப்பீடுக்கான (Life Insurance) நன்மைகளும் வழங்கப்படுகின்றன.
ரூ .279 க்கு 4 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் படி, வாடிக்கையாளர்கள் ரூ .279 ரீசார்ஜ் திட்டத்தை ஆக்டிவேட் செய்தால், தினமும் 1.5 ஜிபி அதிவேக 4 ஜி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி ஆகியவற்றுடன் ரூ .4 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடும் கிடைக்கும்.
இந்த ஆயுள் காப்பீட்டிற்கு (Health Insurance) மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆவண வேலைகளுக்கான தேவை இல்லை. இது மட்டுமல்லாமல், 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தாவும் இலவசமாக கிடைக்குறது. தினசரி வரம்பு முடிந்ததும், இணைய வேகம் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: ஏர்டெல்லின் டாப் மூன்று திட்டங்கள், தினசரி 3 ஜிபி டேட்டா பெறுங்கள்!
ரூ .179 க்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீடு
ஏர்டெல்லின் ரூ .179 ரீசார்ஜ் திட்டத்தில் (Recharge Plan) ரூ .2 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு கிடைக்கிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் தினமும் 2 ஜிபி அதிவேக 4 ஜி இணைய வசதி, அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 300 எஸ்எம்எஸ் வசதி ஆகியவை கிடைக்கின்றன.
இது மட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தின் இலவச சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். தினசரி வரம்பு முடிந்ததும், இணைய வேகம் குறைக்கப்படும் என்பதை நினைபில் கொள்ள வேண்டும்.
ALSO READ: Reliance Jio, Airtel மற்றும் Vodafone-Idea சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள், முழு விவரம் இங்கே!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR