புது டெல்லி: ரிலையன்ஸ் ஜியோவினை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது வடிகையலர்களுக்கு அதிரடி சேவைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் பயனர்களுக்கான புதிய திட்டங்களை வழங்கியுள்ளது.
அதன்படி ரூ.5 -க்கு 4GB டேட்டாவினை வழங்கவுள்ளது. இந்த சலுகை பழைய சிம்மினை 4G-க்கு அப்டேட் பண்ணும்போது மட்டுமே அறிமுக சலுகையாக பயனர்களால் பயன்படுத்த முடியும்.
ஏர்டெல் தற்போது வெளியீட்டுள்ள புதிய திட்டங்களின் பட்டியல்படி ரூ. 8, ரூ. 15, ரூ. 40, ரூ. 349, மற்றும் ரூ. 399 என வரிசையாக வழங்கியுள்ளது.
புதிய திட்டங்களின் விவரம்:-
1. ரூ 5 திட்டம்: 7 நாட்கள் 4 ஜிபி 3 ஜி / 4 ஜி டேட்டா.
2. ரூ. 8 திட்டம்: லோக்கல்/ எஸ்டிடி அழைப்புகள் 30 பைசா / நிமிடம் 56 நாட்களுக்கு வழங்குகிறது.
3. ரூ.40 திட்டம்: 35ரூ மதிப்புள்ள பேச்சு நேரம், வரம்பற்ற காலம் வரை செல்லுபடியாகும்.
4. ரூ.60 திட்டம்: ரூ. 58 பேச்சு நேரம் வரம்பற்ற காலம் வரை செல்லுபடியாகும்.
5. ரூ.149 திட்டம்: ஏர்டெல் டு ஏர்டெல் இலவச அழைப்புகள், 2 ஜிபி. 4 ஜி தரவு 28 நாட்களுக்கு.
6. ரூ.199 திட்டம்: இலவச லோக்கல் அழைப்புகள், 1 ஜிபி. 2/3/4 ஜி தரவு 28 நாட்களுக்கு.
7. ரூ.349 திட்டம்: இலவச லோக்கல்/ எஸ்டிடி அழைப்புகள், 1 ஜிபி 4 ஜி தரவு 28 நாட்களுக்கு.
8. ரூ.399 திட்டம்: இலவச லோக்கல்/ எஸ்டிடி அழைப்புகள், 28 ஜிபி 4 ஜி தரவு 28 நாட்களுக்கு.