கடந்த திங்களன்று பார்தி ஏர்டெல் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை இணைந்து நிதிச் சேவைகளை வழங்குவதாக அறிவித்தது. இது தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கான கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுடன் தொடங்குகிறது. இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடி கடன்களை 'இப்போது வாங்குங்கள் பிறகு செலுத்துங்கள்' எந்தந்த சலுகையில் மூலம் வழங்கும். இது குறித்து இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான பார்தி ஏர்டெல் எம்.டி மற்றும் சி.இ.ஓ கோபால் விட்டல் கூறுகையில், "ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் சேவைகளை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நிதி சேவைகள் வழங்கும் போர்ட்ஃபோலியோவை உருவாக்கி வருகிறது" என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "ஆக்சிஸ் வங்கியுடன் இணைவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இந்த வின்-வின் டெல்கோ-வங்கி பார்ட்னர்ஷிப்பின் மூலம், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கியின் உலகத் தரம் வாய்ந்த நிதிச் சேவைகள் போர்ட்ஃபோலியோ மற்றும் அட்டகாசமான வசதிகளை பெறுவார்கள், அதே சமயம் ஆக்சிஸ் வங்கி ஏர்டெலின் மூலம் சிறப்பான டிஜிட்டல் பயனையும் பெறும்" என்று கூறினார்.
ஏர்டெல் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக்குகள் மற்றும் சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குகிறது. தகுதியான ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நன்றி செயலி மூலம் கிரெடிட் கார்டு கிடைக்கும். மேலும் ஆக்சிஸ் வங்கியானது ஏர்டெல் வழங்கக்கூடிய பல்வேறு சேவைகளையும் பயன்படுத்தும். கிளவுட் மற்றும் டேட்டா சென்டர் சேவைகள் போன்றவற்றை இயக்க அனுமதிக்கும். அதுமட்டுமல்லாது ஆக்சிஸ் வங்கி, ஏர்டெல்லின் மெஸேஜிங் தளம், வீடியோ, ஸ்ட்ரீமிங், கால் மாஸ்கிங் மற்றும் விர்ச்சுவல் கான்டெக்ட் போன்ற டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும். இந்த கூட்டணியின் மூலம் ஏர்டெல்லின் 340 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ஆக்சிஸ் வங்கியின் கடன் மற்றும் பல்வேறு டிஜிட்டல் நிதிச் சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரஷ்யா - உக்ரைன் போரால் கலைந்த எலான் மஸ்கின் கனவுai
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR