இந்தியாவில் நீண்ட பேட்டரி பேக்கப் கொண்ட ஸ்மார்ட்போன் பலரின் விருப்பமாக உள்ளனது. அப்படி 7000mAh பேட்டரி கொண்ட டாப் போன்கள் எது என்பதை பார்ப்போம்.
Samsung Galaxy F62 Gallery
இந்த போனின் (Samsung) அடிப்படை மாடல் 6ஜிபி ரேம் ஆகும், இதன் ஒரிஜினல் விலை ரூ.23,999 ஆகும். அதே நேரத்தில், அதன் இரண்டாவது மாடல் 8 ஜிபி ரேம் ஆகும், இதன் ஒரிஜினல் விலை ரூ.25,999 ஆகும். இந்த போன் சாம்சங் இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
ALSO READ | இவையே 2021 இன் டாப் 5 Smartphones, எது பெஸ்ட்
Tecno Pova 2
Tecno Pova 2 தற்போது நாட்டில் கிடைக்கும் 7000mAh பேட்டரி கொண்ட மலிவான ஸ்மார்ட்போன் (Smartphone) ஆகும். டெக்னோ போவா 2 ஆனது 64 ஜிபி சேமிப்பு மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இரண்டு வகைகளில் வருகிறது. Tecno Pova 2 இன் சில முக்கிய விவரக்குறிப்புகள் 6.95-இன்ச் FHD+ டாட் டிஸ்ப்ளே, 48-மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா சிஸ்டம், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, MediaTek Helio G85 SoC மற்றும் பல உள்ளது.
64GB ஸ்டோரேஜ் கொண்ட அதன் முதல் மாடலின் விலை ரூ.10,999 ஆகும். அதே நேரத்தில், 128GB ஸ்டோரேஜூடன் அதன் இரண்டாவது மாடல், இதன் விலை ரூ.13,499 ஆகும். இந்த இரண்டு மாடல்களும் Dazzle Black, Polar Silver மற்றும் Energy Blue ஆகிய மூன்று வெவ்வேறு வண்ண வகைகளில் கிடைக்கும். இந்த தொலைபேசி Amazon.in மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கிறது.
Samsung Galaxy M51
இந்த பட்டியலில் மூன்றாவது ஸ்மார்ட்போன் Samsung Galaxy M51 ஆகும். பயனர்கள் இந்த போனில் 7000mAh பேட்டரியை பெறுகிறார்கள். 6.7-இன்ச் டாட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி செயலி, 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ், 64-MP குவாட் ரியர் கேமராக்கள் மற்றும் 32MP முன்பக்க கேமராக்கள் ஆகியவற்றுடன் இந்த போன் வருகிறது. இந்த போன் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜூடன் வரும் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.23,990.
ALSO READ | Flipkart சலுகை: 20 ஆயிரம் வரை தள்ளுபடி; Realme வாங்க சரியான நேரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR