காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சட்ட வல்லுநர்கள், தமிழக அமைச்சர்களுடன் இன்று மாலை முதல்வர் ஆலோசனை நடத்தினார்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து தமிழகம் எங்கும் போராட்ங்கள் வெடித்து வருகின்றது.
காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
காவிரி பிரச்சணைக்கு தீர்வு காண, ஜல்லிக்கட்டு போராட்டத்தினை போல் மீண்டும் இளைஞர்கள் ஒன்றுகூடி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ கட்சி தலைவர்களும் ஒன்றுகூடி இளைஞர்களுக்கு தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.
Tamil Nadu CM held meeting with legal experts & state ministers over court proceedings on #CauveryManagementBoard. The state govt had filed petition before SC seeking to initiate contempt proceedings against Centre for not constituting the board within stipulated period of time. pic.twitter.com/5QYXLaP57T
— ANI (@ANI) April 7, 2018
இந்நிலையில் இன்று மாலை, இந்த விவாகாரத்தில் எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சட்டவல்லுநர்களுடனும், அமைச்சர்களுடனும் அலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.