ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியம்! குழந்தைக்கு கால் பகுதியில் பாதிப்பு!

கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் அலட்சியமாக ஊசி போட்டதால் மூன்றரை மாத கை குழந்தைக்கு கால் பகுதியில் பாதிப்பு.  

Written by - RK Spark | Last Updated : Jun 7, 2023, 08:21 AM IST
  • குழந்தைக்கு தவறுதலாக கூசி போட்ட செவிலியர்.
  • காலில் கட்டி உருவாகி குழந்தைக்கு பாதிப்பு.
  • அலட்ச்சியமாக இருந்ததாக குற்றச்சாட்டு.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியம்! குழந்தைக்கு கால் பகுதியில் பாதிப்பு! title=

கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் அலட்சியமாக ஊசி போட்டதால் மூன்றரை மாத கை குழந்தைக்கு கால் பகுதியில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமணையில் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றியதாக வேதனையுடன் குற்றச்சாட்டு. தங்கள் குழந்தைக்கு நடந்தது போன்று வேறு ஒரு குழதைக்கு நடக்காதவாரு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.  சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகன்(30) - பிரியா(28) தம்பதியினர்க்கு கடந்து பிப்ரவரி மாதம் 14ம் தேதி 2வது ஆண் குழந்தை பிறந்துள்ளது.  இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், மூன்றரை மாத ஆண் குழந்தைக்கு 100-வது நாள் ஊசி போடுவதற்கு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போட்டுள்ளனர். 

முதல் இரண்டு ஊசிகள் அவர்களது சொந்த ஊரான புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் போடப்பட்ட நிலையில் மூன்றாவது ஊசியை கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி குழந்தைக்கு இடது கால் தொடையில் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போட்ட மறுநாள் 25-ம் தேதி மூன்றரை வயது ஆண் குழந்தைக்கு ஊசி போடப்பட்ட இடது தொடையில் கட்டி போன்று பெரிதாக சிவந்த நிறத்தில் காணப்பட்டது.  ஊசி போடப்பட்ட இடத்தை தேய்க்க வேண்டாம் என ஊசி போட்ட அரசு மருத்துவமனை செவிலியர் கூறிய நிலையில் குழந்தையின் பெற்றோர்கள் வீக்கத்தை குறைக்க ஐஸ் கட்டியை வைத்து ஒத்தரம் கொடுத்த போதும் கட்டி பெரிதாகிக்கொண்டே இருந்ததால் குழந்தையின் பாட்டி சுபலட்சுமி பயத்தில் கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு போனில் தொடர்புக்கொண்டு தகவல் கூறியுள்ளனர். 

leg

மேலும் படிக்க | பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பும் ஆளுநர்? மத்திய அரசின் ஆதாரத்தையே காட்டி அமைச்சர் பதிலடி

ஆனால் அரசு மருத்துவமனையில் இருந்து பேசிய நபர் சென்னை சென்ட்ரலில் உள்ள இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அலட்சியமாக கூறியதாக தெரிவித்தனர். குழந்தை பிறந்து 3.5 மாதத்தில் வலியும் வேதனையும் அனுபவிக்கும் கை குழந்தையின் நிலையை கண்டு பெரும் சோகத்தில் இருந்த பெற்றோர் கடந்த மே மாதம் 29-ம் தேதி மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்று காண்பித்துள்ளனர். பின்னர் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஊசி போடும்போது குழந்தையின் தொடை பகுதியில் உள்ள சதையை இரு விரல்களில் சேர்த்து பிடித்து ஊசி போட்டிருக்க வேண்டும், செவிலியர் அலட்சியமாக ஊசி போட்டதால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் குழந்தையின் தொடை பகுதியில் பாதியளவு கட்டி பரவியுள்ளதாகவும் இன்னும் தாமதித்தால் எலும்பு பகுதி வரை சென்று எலுப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். 

இதனால் பதறிய குழந்தையின் பெற்றோர் குழந்தை தினமும் வலியில் துடிப்பதை காண முடாயாது என்று உடனடியாக சிகிச்சையளிக்கும்படியும் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மறுநாள் 01.06.2023. அன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தைக்கு இடது காலில் ஏற்பட்ட கட்டியை அகற்றினர்.  அதை தொடர்ந்து தினமும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இருந்து கசியும் சீழ் மற்றும் இரத்தத்தை அகற்றி வருவதாகவும் தெரிவித்தனர். இது குறித்து குழந்தையின் பாட்டி சுபுலட்சுமி பேசியபோது, கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வரும் நோயாளிகளை  அவதூராக பேசி வருவதாகவும் அங்கு பச்சிளம் குழந்தைகளை ஊசிபோடுவதற்க்கு தூக்கி சென்றால் செவிலியர்கள் ஒருமையில் பேசி வெகு நேரம் காத்திருக்கவைப்பதாகவும், வேதனை தெரிவித்தார்.

மேலும் அரசு மருத்துவமனையில் பனியாற்றும் செவிலியர்கள் மக்களுக்கு சேவை செய்யவே அரசு மாத ஊதியம் வழங்குகிறது ஆனால் கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் நடத்தையால் நோயாளிகள் வருவதற்க்கே பயப்படுகிறார்கள் எங்களை போன்ற ஒரளவு வசதியாக இருப்பவர்கள் தனியார் மருத்துவமனையில் குழைந்தையை காட்டி சிகிச்சையளித்து வருகிறோம்.  ஏழை மக்களுக்கு இப்படி நடந்திருந்தால் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கும் எனவே ஊசிபோட்ட செவிலியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எங்கள் குழந்தைக்கு நடந்த கொடுரம் மற்றவர்களுக்கு நடக்க கூடாது, இனிமேல் அந்த செவிலியர் இனி எந்த ஒரு குழந்தைக்கும் ஊசி போடக்கூடாது என்பதே எனது நோக்கம் எனவும் வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | திருமண நிச்சயதார்த்தத்தில் பாயாசத்திற்கு சண்டை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News