திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் உள்ள வி.கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன காவலாளி பாலாஜி என்பவரின் மனைவி குபேந்திரி, கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரசவத்துக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பின் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது, அவரது வயிற்றில் கத்திரிகோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கத்திரிகோல் அகற்றப்பட்டது.
இதையடுத்து மனைவியின் வயிற்றில் கத்திரிகோலை வைத்து தைத்து அஜாக்கிரதையாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாலாஜி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு இ- மெயில் மூலம் புகார் அனுப்பியிருந்தார்.
மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் மனைவியிடம் இருந்து சென்ற மெசேஜ் - குதூகலமான பாலிவுட் பிரபலம்
இதுசம்பந்தமாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், திருவள்ளூர் சுகாதார பணிகள் இணை இயக்குனர் அளித்த அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களில் இருந்து, மருத்துவர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அறுவை சிகிச்சையை எச்சரிக்கையுடன் செய்திருந்தால், குபேந்திரி வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்திருக்க மாட்டார்கள்; 12 ஆண்டுகள் அப்பெண்ணும் வலியில் துடித்திருக்க மாட்டார் எனக் கூறிய ஆணைய உறுப்பினர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் மனைவியிடம் இருந்து சென்ற மெசேஜ் - குதூகலமான பாலிவுட் பிரபலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ