மதுரை கோ.புதூரில் மருமகளை பல லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியபுகாரில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி இயக்குனர் கொண்டால்ராஜ் அவரது மகன் ஜனார்த்தனன் அவரது மனைவி சுமதி ஆகியோர் கைது.
மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் அழகர். கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் வர்ஷா. இவருக்கும், மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி இயக்குனராக பணிபுரியும் கொண்டல்ராஜ்
மகன் ஜனார்த்தனுக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது தங்கநகை மற்றும் வரதட்சணை ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வர்ஷா போலீசில் புகார் அளித்தார்.
மேலும் படிக்க | Escaping Dog: முதலை வாய்க்கு போகாமல் தப்பிக்க முயலும் நாய்: வீடியோ வைரல்
அந்த புகாரில் வர்ஷா கூறியிருந்ததாவது:
எனது தந்தை பெயரில் இருந்த கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை எனது மாமனார் கொண்டல்ராஜ் பெயருக்கு மாற்றித்தரவும், வீடு கட்டுவதற்கு ரூ.50 லட்சத்தை எனது பெற்றோரிடம் இருந்து வாங்கி வருமாறும் கூறி எனது கணவர், அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வருகின்றனர். என் பெயரிலும், கணவர் பெயரிலும் நிலம் வாங்குவதாக கூறி திருமணத்திற்கு முன்பாகவே ரூ.23 லட்சம் பெற்றனர். அந்த தொகையும் என்ன ஆனது என தெரியவில்லை. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின்பேரில் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து வர்ஷாவின் கணவர் ஜனார்த்தன், மாமனார் மின்வாரிய அதிகாரி கொண்டல் ராஜ், மாமியார் சுமதி ஆகியோரை கைது செய்து மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4 நீதிபதி புவனேஸ்வரி முன்னிலையில் ஆஜர்படுத்தியதில் ஜனார்த்தனன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் மாமனார், மாமியார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க | Thrilling Viral Video: ரிங் மாஸ்டரை பின்னி பெடலெடுக்கும் சிங்கம்: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR