School News Update: தமிழகத்தில் 10-12 ம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளிப்போகுமா..!!!

மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கல்வி இழப்பை ஈடுசெய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை குறைப்பது, காலாண்டு தேர்வுகளை ரத்து செய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை கொண்டு வந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2020, 11:39 AM IST
  • மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கல்வி இழப்பை ஈடுசெய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை குறைப்பது, காலாண்டு தேர்வுகளை ரத்து செய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை கொண்டு வந்தது.
  • 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை ஒத்திபோடுவதில் மாநில அரசுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.
  • இருப்பினும், 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்தி வைப்பது குறித்த முடிவை அரசு எடுப்பது கடினம் என மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
School News Update: தமிழகத்தில் 10-12 ம் வகுப்பு பொது தேர்வுகள்  தள்ளிப்போகுமா..!!! title=

தமிழகம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது எப்போது என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், தொற்று நிலைமை காரணமாக இந்த கல்வியாண்டில் 10, மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வுகளையும், 11ம் வகுப்பிற்கான தேர்வுகளையும் அரசு இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளது என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கல்வி இழப்பை ஈடுசெய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை குறைப்பது, காலாண்டு தேர்வுகளை ரத்து செய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை கொண்டு வந்தது.

பள்ளிகளை மீண்டும் திறப்பது நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டால், பொது தேர்வுகளும் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது என்று பள்ளி கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

ALSO READ | மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கிறிஸ்துவ மத போதகர் சஸ்பெண்ட்....!!!

"மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் தேர்வுகளை நடத்துவதற்கு பதிலாக, ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் பொது தேர்வுகளை நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய குழு பரிந்துரைத்தது," என்று அவர் கூறினார்.

10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை ஒத்திபோடுவதில் மாநில அரசுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது, ஏனெனில் அவர்களுக்கு உயர் படிப்புகளுக்கான வேறு தேர்வுகள் எதுவும் இல்லை.

இருப்பினும், 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்தி வைப்பது குறித்த முடிவை அரசு எடுப்பது கடினம் எனவும் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஏனெனில் மாணவர்கள் தங்கள் வருடாந்திர தேர்வுகள் முடிந்த பின்னரே நீட் (NEET)  மற்றும் ஜேஇஇ (JEE)  உள்ளிட்ட பல போட்டித் தேர்வுகளை வேண்டும்

NTA அதாவது தேசிய தேர்வு முகமையுடன் தொடர்பு கொண்டு,  போட்டித் தேர்வுக்கான அட்டவணையை அறிந்து கொள்ள அதிகாரிகள் விரைவில் நடவடிக்கைகளை எடுக்க உள்ளனர் என்றும் அதன்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது  தேர்வுகள்  குறித்து முடிவு செய்யப்படலாம் எனவும் மாநில கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் படிக்க | Hathras Case: வன்முறையை தூண்ட சதி தொடர்பாக 19 FIR பதிவு செய்யப்பட்டுள்ளன..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News