Language: பட்ஜெட் போன்ற முக்கிய ஆவணங்களை தமிழில் வழங்க மத்திய அரசு தயங்குவது ஏன்?

பட்ஜெட் முதலான ஆவணங்களை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளில் வழங்கவேண்டும்”  நாடாளுமன்றத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியிடம் தமிழக எம்.பி ரவிக்குமார் கோரிக்கையை முன்வைத்தார்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 11, 2021, 09:41 AM IST
Language: பட்ஜெட் போன்ற முக்கிய ஆவணங்களை தமிழில் வழங்க மத்திய அரசு தயங்குவது ஏன்? title=

புதுடெல்லி: இந்திய அரசாங்கம், அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு முதன்மை மொழியாக ஆங்கிலத்தை பயன்படுத்துகிறது. ஆங்கிலத்தைத் "துணை அதிகாரப்பூர்வ மொழியாக" இந்தி மொழியும் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும்  அலுவல் ரீதியாக பயன்படுத்தமுடியும். இந்திய அரசியலமைப்பு எந்த மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மத்திய அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். 

“பட்ஜெட் முதலான ஆவணங்களை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளில் வழங்கவேண்டும்”  என்ற கோரிக்கையை, நாடாளுமன்றத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியிடம் எம்.பி ரவிக்குமார் கோரிக்கையாக சமர்ப்பித்தார்.

Also Read | Mountain Warriors: ராணுவம், நட்பு நாடுகளின் படைகள் இமயமலையில் பயிற்சி

இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு ரவிகுமார் எம்.பி எழுதியுள்ள கடிதத்தில், 1961ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 22 மொழிகளை அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். 

ravikumar

அரசியலமைப்புச் சட்டத்தின் 350ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர், பொருளாதாரர் ஆய்வறிக்கை, மத்திய பட்ஜெட் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளார்.

Also Read | இந்துக்களின் பெரும்பாலான கோவில்கள் சேதமடைந்துள்ளன, Pakistan ஆணையம் சாடல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News