மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி நினைவாக, புதுச்சேரி 100 அடி சாலைக்கும், காரைக்கால் - திருநள்ளாறு புறவழிச்சாலைக்கும் கருணாநிதியின் பெயர் வைக்கவும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மறைந்த கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்கவும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதற்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது,
தலைவர் கலைஞர் அவர்கள், புதுச்சேரி மக்களின் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காகவும், முழு மாநில அந்தஸ்து வழங்கக்கோரியும் தொடர்ந்து பாடுபட்டதை நினைவுகூர்ந்து, அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள அன்னை இந்திரா காந்தி, இளந்தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ள சாலைக்கும், காரைக்கால் - திருநள்ளாறு புறவழிச்சாலைக்கும் - பட்டமேற்படிப்பு மையத்திற்கும் "டாக்டர் கலைஞர்" பெயர் சூட்டி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தலைவர் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்துள்ள புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்களுக்கும், புதுவை அமைச்சரவைக்கும், அதேபோன்று புதுச்சேரி மக்களுக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கடிதத்தில் எழுதியுள்ளார்.