Driving License News Tamil : டிரைவிங் லைசென்ஸூக்காக கேரளாவைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டு முகவரிக்கு மாறும் நிகழ்வுகள் கொஞ்சம் வியப்பாக தான் இருக்கிறது. ஏன் அவர்கள் தமிழ்நாட்டு டிரைவிங் லைசென்ஸ் எடுக்கிறார்கள்? அதற்காக எப்படி முகவரி மாறுகிறார்கள்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு காரணம் கேரளாவில் இருக்கும் டிரைவிங் லைசென்ஸ் நடைமுறை தான். கேரளாவில் அவ்வளவு சீக்கிரம் டிரைவிங் லைசென்ஸ் நீங்கள் எடுத்துவிட முடியாது. தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது டிரைவிங் லைசென்ஸ் கிடைக்க கேரளாவைச் சேர்ந்தவர்கள் பல மாதங்கள் காத்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் ஒருவர் ஓட்டுநர் உரிமம் வாங்க கேராளவில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
ஆரம்பத்தில், விண்ணப்பதாரர்கள் டிரைவிங் டெஸ்டுக்கு விண்ணபிக்க ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அதன்பிறகு இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, ஓட்டுநர் தேர்வை திட்டமிடுவதற்கு தோராயமாக இரண்டு மாதங்கள் தாமதத்தை எதிர்கொள்கின்றனர். அதாவது, செப்டம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் டிசம்பர் அல்லது ஜனவரி வரை கூட ஆகும். ஏன் அதன்பிறகும் கூட காலதாமத்ததால் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாமல் போகலாம். ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும், இணையதளத்தில் உரிம விவரங்கள் புதுப்பிக்கப்பட்டாலும், அச்சிடப்பட்ட அட்டை எப்போது கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
ஆனால், தமிழ்நாட்டில் மிக விரைவாக ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குப் பிறகு கற்றல் தேர்வில் பங்கேற்கலாம். 30 நாள் காத்திருப்பு காலத்தைத் தொடர்ந்து, ஓட்டுநர் சோதனைத் தேதியை திட்டமிடலாம். சோதனை முடிந்ததும், ஐந்து வேலை நாட்களுக்குள் அச்சிடப்பட்ட உரிம அட்டை வழங்கப்படும். இந்த விரைவான செயல்முறை காரணமாக, பல மலையாளிகள் இப்போது தமிழ்நாட்டில் இருந்து தங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெற விரும்புகின்றனர்.
மேலும் படிக்க | ஒரே நாளில் 2 முறை நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி.. காரணம் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள பல ஓட்டுநர் பள்ளிகள் கேரளாவில் இருந்து விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் ஆதார் முகவரியை தற்காலிகமாக தமிழ்நாடு முகவரிக்கு புதுப்பித்து கொடுக்கின்றன. சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, உரிமம் வழங்கப்பட்டவுடன், ஆதார் முகவரி அசல் கேரள முகவரிக்கு மாற்றப்படும். இரு மாநிலங்களிலும் உள்ள செலவுகள் தோராயமாக ஒரே மாதிரியானவை. கேரளாவில், டிரைவிங் ஸ்கூல்களில் வகுப்புகள் உட்பட, கார் மற்றும் பைக் உரிமத்திற்கு, 10,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதே தொகை, கமிஷன் உட்பட தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற செலவாகிறது.
விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் தேர்வு நாளில் மட்டும் தமிழகத்திற்குச் வந்தால் போதும். பயணச் செலவுகளைக் கணக்கிட்டாலும், வேகமான செயல்முறை காரணமாக மலையாளிகள் இந்த ஆப்சனை தேர்வு செய்கிறார்கள். கேரளாவில் நடத்தப்படும் ஓட்டுநர் சோதனை அளவுக்கு தமிழகத்தில் ஓட்டுநர் சோதனை கடுமையாக இல்லை என்பதும் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களின் எண்ணமாக இருக்கிறது. கடந்த மே மாதம் கேரளாவில் ஓட்டுநர் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, உரிமம் வழங்குவதில் குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரு அலுவலகத்துக்கு வெறும் ஓட்டுநர் 40 சோதனைகள் மட்டுமே என கண்டிஷன் போடப்பட்டிருக்கிறது.
இந்த தேர்விலும் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை என்பது குறைவாகவே இருக்கிறது. கூடுதலாக ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதில் இருக்கும் தாமதம், அதில் பிழைகள் இருந்தால் அதனை மீண்டும் சரிசெய்வதில் இருக்கும் தாமதம் ஆகியவை காரணமாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கிறார்கள். வெளிநாடு செல்ல திட்டமிடுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் தேவைபட்டால், கேரளாவில் இருக்கும் இந்த நடைமுறை சிக்கலில் அவர்கள் சீக்கிரம் ஓட்டுநர் உரிமம் பெற முடியாது. இதனால் தான் தமிழ்நாட்டு உள்ளிட்ட பிற மாநிலங்களை ஓட்டுநர் உரிமம் பெற கேரளாவைச் சேர்ந்தவர்கள் தற்காலிகமாக முகவரியை மாற்றி விண்ணப்பிக்கிறார்கள். கர்நாடகாவிலும் இதேபோல் விண்ணப்பிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ