TN Budget: வெள்ளை அறிக்கை என்றால் என்ன? ஆகஸ்ட் 9 என்ன எதிர்பார்க்கலாம்?

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, ஆகஸ்ட் 9 ஆம் தேதி தமிழக நிதி அமைச்சர் நிதிநிலையின் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். வெள்ளை அறிக்கையில் இடம் பெறவுள்ள அமசங்கள் குறித்து பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2021, 03:30 PM IST
TN Budget: வெள்ளை அறிக்கை என்றால் என்ன? ஆகஸ்ட் 9 என்ன எதிர்பார்க்கலாம்? title=

தமிழகத்தில் 2021-22 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இந்த மாதம் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்வார்.

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, ஆகஸ்ட் 9 ஆம் தேதி தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் (Palanivel Thiagarajan) நிதிநிலையின் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். வெள்ளை அறிக்கையில் இடம் பெறவுள்ள அமசங்கள் குறித்து பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. 

வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

வெள்ளை அறிக்கை என்பது அரசின் அப்போதைய நிதி நிலையையும், எதிர்கால திட்டங்களையும் மக்களுக்கு முன்னால் வெளிப்படையாகத் தெரிவிக்கும் ஒரு அறிக்கையாகும். அரசாங்கம் மட்டுமல்லாமல், நிறுவனம், அமைப்பு, கூட்டமைப்பு ஆகியவை ஒரு பிரச்சனையை சரி செய்ய எடுத்திருக்கும் முடிவுகள் மற்றும் தீர்மானங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் வெள்ளை அறிக்கை பயன்படுகிறது. 

பொதுவாக, பிரச்சனை மிகுந்த ஒரு விவகாரத்தைப் பற்றி புரிந்து கொள்ளவும், அந்த பிரச்சனையை தீர்க்கவும், அது பற்றி முடிவெடுக்கவும் வெள்ளை அறிக்கை வழி செய்கிறது. 

> 9 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள வெள்ளை அறிக்கையில், திமுக ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகிய ஆண்டு, அதாவது, 2011 ஆம் ஆண்டில் இருந்த நிதி நிலையும், தற்போது உள்ள நிதி நிலையும் ஒப்பிட்டுக் காட்டப்படும் என கூறப்படுகின்றது. 

> தற்போது தமிழகம் கடன் சுமையில் மூழ்கியுள்ளது. இதற்கான காரணம் வெள்ளை அறிக்கையில் விளக்கப்படடக்கூடும். 

ALSO READ: TN Budget: 9ஆம் தேதி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்கிறார் பழனிவேல் தியாகராஜன்

> 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகிய போது, தமிழகத்தின் மொத்த கடன் அளவு 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும், அதிமுக (AIADMK) அரசு பொறுப்பேற்று ஆட்சிபுரிந்த பத்து ஆண்டுகளில் இந்த கடன் அளவு 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த விரிவான விவரங்களும் அறிக்கையில் இடம்பெறக் கூடும்.

> தமிழகம் ஏற்கனவே வாங்கியுள்ள சுமார் ரூ. 4.85 கடனுக்காக, ஆண்டுக்கு ரூ. 50,000 கோடியை வட்டியாக கட்டி வருகிறது. கடன் சுமை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

>  யாரும் எதிர்பாராத கொரோனா பெருந்தொற்றால், அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சுமை பற்றியும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்படும். இந்த பெருந்தொற்று காரணமாக அரசின் செலவுகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளன. 

> எனினும், தமிழகத்தின் கடன் சுமைக்கு கொரோனா பெருந்தொற்றை மட்டும் காரணம் சொல்ல முடியாது என நிபுணர்கள் கூறுகிறார்கள். கடந்த சுமார் ஏழு ஆண்டுகளாக தமிழகத்தின் நிதிச்சுமை சிறிது சிறிதாக அதிகரித்து வருகின்றது. கொரொனா பெருந்தொற்று அந்த சுமையை இன்னும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

> கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசால் வருவாய் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிஷ்டமான விஷயமாகும். மறுபுறம் செலவினங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் பெரும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. 

> கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வாங்கப்பட்ட கடன்கள், அவை பயன்படுத்தப்பட்ட விவரங்கள் ஆகியவை தற்போது திமுக (DMK) அரசு தாக்கல் செய்யப்போகும் வெள்ளை அறிக்கையில் விவரிக்கப்படும்.

> மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 3 சதவிகிதத்திற்குள் இருக்க வேண்டும் என்று வரையறை உள்ளது. அதை தமிழக அரசு கடந்து விட்டது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். 

> தமிழக அரசின் நிதிநிலை தவிர பிற துறைகளான போகுவரத்துத்துறை, மின்வாரியம் ஆகியவற்றின் நிதி நிலை பற்றிய அறிவிப்புகளும் வெள்ளை அறிக்கையில் (White Paper) இடம் பெற வாய்ப்புள்ளது.

இந்த பட்ஜெட் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் மக்களின் சுமையை அதிகரிக்காத வண்ண இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். 

ALSO READ: ஆகஸ்ட் 13ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News