OPS & EPS தலைமையில் தேர்தலில் போட்டியிட நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்: அமைச்சர் பியூஷ்கோயல்

அதிமுகவுடன் கூட்டணி அமைந்தது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 19, 2019, 05:48 PM IST
OPS & EPS தலைமையில் தேர்தலில் போட்டியிட நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்: அமைச்சர் பியூஷ்கோயல் title=

அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமீத்ஷா இன்று சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அமீத்ஷா வரமாட்டார் எனக் கூறப்பட்டது. இதனால் கூட்டணி குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உட்பட சில பாஜக தலைவர்கள் கூட்டணி குறித்து பேச்சுவாரத்தை நடத்தினர். இன்று அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 5 தொகுதியில் பாஜக போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதுக்குறித்து கருத்து தெரிவத்த மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் கூறியதாவது: அதிமுகவுடன் கூட்டணி அமைந்தது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் மோடியை பிரதமராக தேர்தேடுக்க இந்த கூட்டணி அமைந்துள்ளது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என பியூஷ் கோயல் கூறினார்.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News