அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான மறுநாள் ஆவணங்கள் அழிப்பு? வைரலாகும் வீடியோ!

செந்தில் பாலாஜி கைதான மறுநாள் கோவை மாநகராட்சி மேயரின் கல்பனா ஆனந்தகுமாரின் தம்பி குமார் வீட்டில் ஆவணங்களை கொட்டி குமார் தீ வைத்து எரித்ததாக பிரபல தனியார் நாளிதழிலின் youtube பக்கத்தில் வீடியோ வைரல் ஆகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 14, 2023, 08:15 AM IST
  • கடந்த ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது.
  • கடந்த ஆகஸ்டில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தது.
  • இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான மறுநாள் ஆவணங்கள் அழிப்பு? வைரலாகும் வீடியோ! title=

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடான பணம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இவர் கைது செய்வதற்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பில் உள்ள நண்பர்கள் வீட்டில் தமிழகம் முழுவதும் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு அவரை கைது செய்தனர்.  இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான மறுநாள் கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி மேயரின் கல்பனா ஆனந்தகுமாரின் தம்பி குமார் வீட்டிற்கு ஒரு சில கார்கள் வந்ததாகும் அதிலிருந்து பெட்டி பெட்டியாக ஆவணங்களை கொட்டி குமார் தீ வைத்து எரித்ததாக பிரபல தனியார் நாளிதழிலின் youtube பக்கத்தில் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

மேலும் படிக்க | “பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு” என பாஜகவின் திசைதிருப்பும் தந்திரத்தை முறியடிப்பீர் -முதல்வர்

அதேபோல அதில் ஒரு சில ஆவணங்கள் எரியாமல் இருந்ததாகவும் அதில் 66 லட்சத்து 50 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் கைது செய்த உடனே ஆவணங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.  இந்த வீடியோ குறித்து மேயரின் உறவினர்களிடம் விசாரித்த பொழுது அது கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வீட்டு அருகே புதர் மண்டி கிடந்த குப்பைகள் எரிக்கப்பட்டதாகவும், வேறொரு பக்கம் தீ பரவாமல் இருக்க குச்சியை வைத்து கட்டுப்படுத்தியாகவும், இதனை வேண்டுமென்றே பக்கத்து வீட்டில் வசிக்கும் தங்களுக்கு எதிராக செயல்படும் ஒரு நபர் வீடியோ எடுத்து தற்போது பரப்புவதாக தெரிவித்துள்ளார்.  கோவை மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமிக்க பட்டதுடன் கோவை மாவட்ட நிர்வாகம், கட்சி பொறுப்புகள் அனைத்தும் அவரது கையில் இருந்தது.மேலும் அவருடைய தொகுதியை விட இங்கே அதிகமான வேலை பணிகளை செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை, கடந்த ஆகஸ்டில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதில் எழுந்த பிரச்னை காரணமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் பெற சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, விளக்கம் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜாமீன் மனுவை மட்டுமல்லாமல் வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.  உயர் நீதிமன்ற உத்தரவின்படி,  சிறப்பு நீதிமனறத்தில் இருந்த இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

பின், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுவில், கைதாகியிருந்த நேரத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளதால், உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.  இந்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வ்ழங்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் கோரப்பட்டது. அதேபோல குறுகிய காலத்திற்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.

மேலும் படிக்க | உதயநிதி தலைக்கு விலை... அவர் போலி சாமியாராக தான் இருக்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News