வந்தே பாரத்... 'வாவ்' போட்ட வானதி! ஆர்வத்தில் கோளாறாக பேச்சு - விமானத்தை போல் வேகமா?

சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை குறித்து கோயம்புத்தூர் தெற்கு எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் பேசிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 8, 2023, 06:12 PM IST
  • சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்
  • இந்த ரயில் பயண நேரம் 5 மணி 50 நிமிடங்களாகும்.
வந்தே பாரத்... 'வாவ்' போட்ட வானதி! ஆர்வத்தில் கோளாறாக பேச்சு - விமானத்தை போல் வேகமா? title=

Chennai Coimbatore Vande Bharat Train: சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை குறித்து கோயம்புத்தூர் தெற்கு எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் பேசிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது. 

Chennai Coimbatore Vande Bharat Train: பல்வேறு நலத்திட்டங்களையும், சேவைகளையும் தொடங்கிவைக்க பிரதமர் மோடி இன்று மதியம் 2.42 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், தலைவர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். 

தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம், அடையார் ஐஎன்எஸ் விமானத்தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைந்தார். அங்கு சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார். இது இந்தியாவில் 12ஆவது வந்தே பாரத் ரயில் சேவையாகும். சென்னை - பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் ஏற்கெனவே இரு்கும் நிலையில், தற்போது அவர் தமிழ்நாட்டிற்கு உள்ளேயே பயணிக்கும் முதல் வந்தே பாரத் ரயிலாகும். 

மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி - திமுகவினர் முகத்திலேயே படிவத்தினை எறிந்து ஆத்திரம்

இந்த வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை - கோவை இடையேயான தூரத்தை இந்த வந்தே பாரத் ரயில், 5 மணி நேரம் 50 நிமிடங்களில் ரயில் கடந்து செல்லும். இந்த ரயில் சராசரியாக 110 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டம். 

இந்நிலையில், பிரதமர் மோடி தொடங்கிவைத்த ரயிலில் கோயம்புத்தூர் தெற்கு எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனும் பயணித்தார். முன்னதாக, ரயில் சேவை தொடங்குவதற்கு முன், தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் ரயிலின் உள்ளே இருந்து வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி கொடுத்தார். 

அப்போது பேசிய அவர்,"அனைவருக்கும் ரயில் பயணம் மகிழ்ச்சியளிக்க கூடிய ஒன்றாகும். ஆனால், எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பது என்னவென்றால், நான் கோயம்புத்தூரில் எம்எல்ஏவாக இருக்கும் இந்த நேரத்தில் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியிருப்பது மிகவும் பெருமையளிக்கிறது, அதே ரயிலில் நான் பயணிப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை சாத்தியப்படுத்தி பிரதமர் மோடிக்கு நன்றி" என்றார். 

அப்போது, செய்தியாளர் இன்டர்சிட்டி போன்ற மற்ற ரயில்களுக்கும் இந்த ரயிலுக்கும் என்ன வித்தியாசம் என கேள்வியெழுப்பினார். அதற்கு அவர்,"நீங்கள் கூறிய சீன புல்லட் ரயிலிலும் நான் பயணித்திருக்கிறேன். அதில் செல்லும்போதெல்லாம் இதேபோன்று எப்போது நம் நாட்டில் ரயில் வரும் என்ற ஏக்கம் இருந்தது. 

தற்போது அந்த கனவு நனைவாக தொடங்கியிருக்கிறது. நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. தமிழ்நாட்டிற்கு கூடுதல் பெருமை, ஏனென்றால் சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்பில் உருவாக்கப்படும் பெட்டிகள் தற்போது நாடு முழுவதும் சேவை அளிக்கிறது. இதில் நிறைய வசதிகள் உள்ளது, வைஃபை உள்ளது, பாதுகாப்பு அம்சம் நிறைந்துள்ளது" என்றார். 

மேலும் அவர்,"விமான நேரத்திற்கும், இதற்கும் ஏறத்தாழ ஒரே அளவிலான நேரம்தான். இது வீட்டில் அமர்ந்து பயணிப்பது போன்ற உணர்வை தருகிறது. மேலும், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் சேவை வருங்காலத்தில் வரும்" என கூறினார். இதில், அவர் வந்தே பாரத் ரயிலை, புல்லட் ரயில், விமான பயணத்திற்கு ஒப்பீடாக கூறியது தற்போது சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளது. 

அதாவது, சென்னை - கோவைக்கு செல்லும் சதாப்தி ரயில் 7 மணிநேரத்தில் செல்லக்கூடிய நிலையில், வந்தே பாரத் 5 மணி 50 நிமிடங்களில் சென்னை - கோவைக்கு செல்கிறது. மணிக்கு 110 கி.மீ., வேகத்தில்தான் தற்போது இயக்கப்பட உள்ளது. எனவே, இதனை விமான சேவையுடன் வானதி ஸ்ரீனிவாசன் பேசியது கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | PM Modi: தென்மாவட்ட மக்களுக்கு நற்செய்தி... சிறப்பு ரயிலை தொடங்கிவைக்கும் பிரதமர் - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News