விழுப்புரம்; தடுப்பூசி போட்டுகொண்ட மாணவி மயக்கம்..!

விழுப்புரம் அருகே தடுப்பூசிக் கொண்ட மாணவி திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - S.Karthikeyan | Last Updated : Jan 6, 2022, 01:46 PM IST
  • விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் செலுத்தப்படுகிறது
  • வழக்கம்போல் இன்று தடுப்பூசி செலுத்தும்போது, மாணவி ஒருவர் திடீரென மயக்கமடைந்துள்ளார்
  • இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
விழுப்புரம்; தடுப்பூசி போட்டுகொண்ட மாணவி மயக்கம்..! title=

தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் பரவல் காரணமாக 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இருப்பதால், அவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ALSO READ | ஐந்து வயது பெண்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 10 வயது சிறுவர்கள்

இதேபோல், விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களாக மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலையிலும் வழக்கம்போல் மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அப்போது, தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவி ஒருவர் திடீரென மயக்கமடைந்துள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பள்ளி வளாகம் முழுவதும் பதட்டமான சூழல் உருவானது. உடனடியாக, அங்கிருந்த ஆசிரியை ஒருவர் மாணவியை கைத்தாங்கலாக தூக்கி அவரை ஆசுவாசப்படுத்தினார். பின்னர், அவர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். அந்தப் பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட இருந்த நிலையில், மாணவி மயக்கமடைந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ALSO READ | போலீஸ் விசாரணையின் போது சாமியாட்டம்... தில்லாலங்கடி பெண் சாமியார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News